Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தோண்ட தோண்ட தண்ணீர்! சென்னை சுற்றுவட்டாரத்தில் செம சேஞ்ச்.. நீர்வளத்துறை மேற்கொண்ட சூப்பர் நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் உருவாகி சென்னையில் கடலில் கலக்கும் கூவம் ஆற்றில் ஒவ்வொரு மழை காலத்திலும் ஏராளமான மழை நீர் வீணாவதால் அதை சேகரிக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் புதிய தடுப்பணையை கட்டி வருகிறது. இதன் மூலம் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் நீர் மட்டம் உயரும்.

இந்த உலகில் ஏராளமான மனித நாகரீகங்கள் இருக்கின்றன. ஆனால் இவை அனைத்தும் ஏதேனும் ஒரு நதிக்கரையில்தான் உருவாகியுள்ளன. நதிகள், ஆறுகள் மனித நாகரீகத்தை உருவாக்குகிறது. ஆனால் எந்த நாகரீகமான மனித சமூகமும் புதியதாக ஆறுகளையும், நதிகளையும் உருவாக்க முடியாது. எனவே இவற்றை பாதுகாப்பது நமது கடமையாக இருக்கிறது என்று வரலாற்று ஆய்வாளர்கள் தொடங்கி விஞ்ஞானிகள் வரை அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர்.

The Water Resources Department is building a dam to store the rainwater mixed in the Cooum river

சென்னையை பொறுத்த அளவில் மூன்று முக்கியமான ஆறுகள் வடிகால்களாக செயல்படுகின்றன. அதில் கூவத்திற்கு பெரும் பங்கு இருக்கிறது. சென்னைக்கு வெளியே 40 கி.மீ, சென்னைக்குள் 18 கி.மீ என ஓடும் இந்த ஆற்றில் ஒரு காலத்தில் படகு போக்குவரத்து, படகு போட்டிகள் கூட நடைபெற்றன. ஆனால் மக்கள்தொகை பெருக்கம், பெரும் நிறுவனங்களின் கழிவு நீர் ஆகியவை இந்த ஆற்றை முற்றிலுமாக மாசுபடுத்திவிட்டது.

சென்னைக்குள் கடந்த 2015ம் ஆண்டு வெள்ளம் வந்தபோது வடிகாலாக செயல்பட்டது இந்த ஆறு. ஒருவேளை இதனை நாம் முழுமையாக ஆக்கிரமித்திருந்தால் வெள்ளம் சென்னையை கடுமையாக பாதித்திருக்கும். அதேபோல சுனாமி வந்தபோதும் இது வடிகாலாக செயல்பட்டு ஏராளமான பாதிப்புகளை தடுத்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கேசாவரம் எனும் சிற்றூரில் கல்லாற்றின் கிளை ஆறாக உருவான கூவம் சென்னையில் கலக்கிறது. ஆனால் இதன் கரைகள் தொடர்ந்த ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.

சாமானிய மக்களின் வாழ வழியில்லாமல் இதன் கரை ஓரங்களில் கூடாரமிட்டு தங்கியிருந்தாலும், பெரும் கட்டுமானங்கள் இதன் கரைகளை அதிக அளவில் சுருக்கியதற்கு காரணமாக இருக்கிறது. எனவே இதை மீட்டெடுக்க அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. அதேபோல இந்த ஆறு திருவள்ளூரில் பாயும் போது தெளிவாகவும், சென்னைக்குள் வந்த பின்னர் அசுத்தமாகவும் மாறிவிடுகிறது. இதனால் ஒவ்வொரு மழைக்காலத்திலும் பெய்யும் மழைநீர் இதில் ஏராளமான வீணாகிறது.

எனவே இதை சேமிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இவ்வாறு சேமிக்கப்படும் நீர் கோடை காலங்களில் பயன்படுத்தலாம் என்றும் யோசனை கூறினர். இதனையடுத்து கூவம் ஆற்றின் நடுவே தடுப்பணை கட்டும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது. ஏற்கெனவே இந்த ஆற்றின் நடுவே கேசவபுரம், ஜமீன் கொரட்டூா், பருத்திப்பட்டு ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக இப்பகுதியில் நலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

The Water Resources Department is building a dam to store the rainwater mixed in the Cooum river

ஆனால் இந்த அணைகள் நீண்ட காலத்திற்கு நீடித்து வராமல் வெள்ளம் வரும்போதெல்லாம் உடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே நீா்வளத் துறை சார்பில், திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் பிஞ்சிவாக்கம், புட்லூர் ஆகிய பகுதிகளில் இரண்டு தடுப்பணைகள் கட்டப்பட்டன. தற்போது இது நல்ல முறையில் இருக்கிறது. இது தவிர திருவள்ளூர் மாவட்டத்தின் அதிகத்தூர் கிராம எல்லை அருகே கூவம் ஆற்றின் குறுக்கே நீர்வளத்துறை மூலம் 3வது தடுப்பணை அமைக்க ரூ.17.70 கோடியில் சமீபத்தில் மாநில அரசு அனுமதி அளித்தது.

இதற்கான பணிகளும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கின. சுமார் 200 மீ நீளத்திற்கு தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. தற்போது பருவமழை காலம் தொடங்கியுள்ளதால் வரும் நாட்களில் மழை தீவிரமாக இருக்கும். எனவே பருவமழை தொடங்குவதற்கு முன்னர் இந்த தடுப்பணை கட்டும் பணிகளை முடித்து அதை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த தடுப்பணையில் 50 மில்லியன் கன அடி நீர் சேமிக்க முடியும். எனவே சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+