சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"தலைக்கு மேல கத்தி".. கொளுத்தி போடும் பிரேமலதா.. படீர் பேச்சுக்கள்.. தகர்க்குமா அதிமுக?

பிரேமலதாவின் பேச்சு அதிருப்தியை உண்டு பண்ணி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: வர்ற வர்ற பிரேமலதாவின் பேச்சுக்கள் அத்தனையும் அதிமுகவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலேயே இருந்து வருவதாக சலசலப்புகள் தமிழக அரசியலில் கிளம்பி உள்ளன.

Recommended Video

    காஞ்சிபுரம்:அதிமுக, திமுக தலைக்கு மேல் கத்தி… அதிரடி காட்டிய பிரேமலதா விஜயகாந்த்!

    கடந்த முறை தேர்தலின்போதே, தேமுதிகவை உள்ளே சேர்க்க அதிமுகவுக்கு மனப்பூர்வமாக இஷ்டமில்லை.. அதனால்தான் ஜெயக்குமார், "தேமுதிக அதிமுக கூட்டணிக்குள் வந்தால் நல்லது.. வராவிட்டால் ரொம்ப நல்லது" என்று ஒருமுறை பேட்டியின்போது கூறியிருந்தார்.

    இதற்கு பிறகு பாஜகவின் தயவால்தான் கூட்டணிக்குள் அதுவும் கடைசி நிமிஷத்தில் இணைத்து கொள்ளப்பட்டது.. அப்படியும் அந்த கட்சிக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் என 4 தொகுதிகள் தந்தும், நான்கிலும் மண்ணை கவ்விக் கொண்டது. அதனால்தான், இப்போது அதிமுக யோசிக்கிறது.

     41 சீட்டுகள்?

    41 சீட்டுகள்?

    இப்போதைக்கு வெறும் 2 சதவீதம் வாக்குகளைதான் தேமுதிக கையில் வைத்துள்ளது... இதை வைத்து கொண்டுதான், 41 சீட் கேட்டு பிடிவாதம் பிடித்தார் பிரேமலதா. கூட்டணியிலேயே இருந்தால், எப்படியும் மாநிலங்களவை எம்பி பதவியை இந்த முறையாவது வாங்கிவிடலாம், ராஜ்ய சபா சீட் கிடைத்தால் நிச்சயம் சுதீஷை இந்த முறை மத்திய அமைச்சராகவும் வாய்ப்பு கிடைக்கும் என்று பிரேமலதா யோசித்ததே இதற்கு காரணம். ஆனால் எல்லா கனவும் காற்றில் கரைந்துபோய்விட்டது.

     அதிமுக

    அதிமுக

    கடைசிவரை அதிமுக கூப்பிட்டு பேச்சுவார்த்தை நடத்தவில்லை.. "கூட்டணி பேச்சை உடனே தொடங்குங்கள்" என்று வாய்விட்டு பிரேமலதா சொல்லியும் அதிமுக கண்டுகொள்ளவில்லை.. "எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு" என்று சொல்லியும், அதிமுக கண்டுகொள்ளவில்லை.. இதனால்தானோ என்னவோ, தன் பேச்சையும், தொனியையும் வேறு விதமாக திருப்பி வருகிறார் பிரேமலதா..

    கேப்டன்

    கேப்டன்

    "எனக்கும் சரி கேப்டனுக்கும் சரி கூட்டணியில் உடன்பாடு இல்லை... தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை கூட்டணி. தேமுதிக தனித்து போட்டியிடுவது புதிதல்ல.. தனியாக களம் காண முடியும் என்று ஏற்கனவே நிரூபித்தவர்கள்... கூட்டணியில் இருந்துகொண்டு நம்முடைய வாக்குகளை வாங்கிக் கொண்டு நம் கட்சியினரையே புறக்கணிக்கிறார்கள்.. அதனால், நாம் யாருக்கும் காத்திருக்கத் தேவையில்லை.. அதிமுக தலைக்கு மேல் பெரிய கத்தி தொங்கி கொண்டிருக்கிறது.. இன்னும் ஒரு வாரத்தில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது" என்று கூறியுள்ளார்.

    சலசலப்பு

    சலசலப்பு

    இதுதான் சலசலப்பை உருவாக்கி வருகிறது.. கூட்டணியில் உடன்பாடு இல்லை என்றால், இத்தனை நாளும் ஏன் காத்து கொண்டிருந்தது தேமுதிக? எங்களை அழைத்து பேசுங்கள் என்று ஏன் வாய்விட்டு சொன்னது? பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு என்று ஏன் எச்சரித்தது? என்ற கேள்விகள் எழுகின்றன.

    வருகை

    வருகை

    அதுமட்டுமல்ல, அதிமுகவில் இப்போது சூழல் சரியில்லை.. அவர்களுக்குள்ளேயே நிறைய பிரச்சனைகள் உள்ளது.. அது தெரிந்தும் சசிகலாவின் வருகையை ஒரு மிரட்டலாக அதிமுகவுக்கு எதிராக திருப்பி விடவும் பிரேமலதா முயற்சிக்கிறாரா என்ற சந்தேகமும் எழுகிறது.. "அதிமுக தலைக்கு மேல் பெரிய கத்தி தொங்கி கொண்டிருக்கிறது" என்று ஏன் சொல்ல வேண்டும்? இதுவே திமுகவில் சொல்கிறார்கள் என்றால் அது வேறு.. அவர்கள் எதிர்கட்சி சொல்லத்தான் செய்வார்கள்..

     சசிகலா

    சசிகலா

    ஆனால், இவ்வளவு காலம் இதே கூட்டணியில் இருந்து கொண்டு, அவர்கள் தந்த சீட்டில் போட்டியிட்டு தோல்வியும் அடைந்துவிட்டு, சசிகலாவை வைத்தே அதிமுக தலைமையை சீண்டுவது சரியில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்... பிரேமலதாவுக்கு சசிகலா மீது தனிப்பட்ட முறையில் பிரியம், பாசம், மரியாதை இருக்கலாம். ஆனால், அதை அதிமுகவுக்கு கலக்கத்தை தரும் வகையில், வார்த்தை பிரயோகமாக பயன்படுத்த கூடாது என்பதே பலரது கோரிக்கை..!

    English summary
    There is a last Chance to DMDK in TN Assembly Election 2021
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X