எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படவில்லை.. சசிகலா பேட்டி.. திமுகவிற்கும் அட்வைஸ்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளதாக சசிகலா குற்றம் சாட்டியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சசிகலா புகார் கூறியுள்ளார். அதிமுகவில் இணைவது மக்களின் கைகளில்தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசுடன் மாநில அரசு மல்லுக்கட்டிக்கொண்டிருந்தால் பாதிக்கப்படுவது மக்கள்தான் என்றும் சசிகலா தெரிவித்தார்.

பதவிக்காக அதிமுகவில் சிலர் எனக்கு எதிராக பேசுகின்றனர். அதிமுக தற்போது சரியான எதிர்கட்சியாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டினார். ஜெயலலிதா போன்ற தலைமை அதிமுகவில் இல்லை என்றும் சசிகலா கூறினார். தொண்டர்கள் விரும்பும் போது நான் அதிமுகவில் இணைவேன் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டின் பிரதமர் ஒரு மாநிலத்திற்கு வருவது சாதாரணமான விசயம் அதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை. மாநிலத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் நமக்கு மேலே மத்திய அரசு உள்ளது. மாநிலத்தில் வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் ஆட்சியில் இருப்பார்கள். மாநில அரசுகள் எப்போதும் மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல வேண்டும்.

மக்கள் சொல்ல வேண்டும்

மக்கள் சொல்ல வேண்டும்

திமுக அரசு ஓராண்டு நிறைவடைந்து விட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளது. அதை தவிர வேறு சில பிரச்சினைகளும் உள்ளன. திமுக அரசு ஓராண்டில் நூற்றுக்கணக்கான திட்டங்களை நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக அரசும் அமைச்சர்களும்தான் சொல்கிறார்கள் மக்கள் சொல்லவில்லை. மக்கள் வந்து மனதளவில் மகிழ்ச்சியடைந்து நிறைய செய்திருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். அதுதான் அரசுக்கு கிடைத்த வெற்றி.

Recommended Video

    சென்னை: அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை... சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு!
    மத்திய அரசுடன் மல்லுக்கட்ட கூடாது

    மத்திய அரசுடன் மல்லுக்கட்ட கூடாது

    தேர்தலுக்கு முன்பாகவும் தேர்தலுக்கு பின்பு சில மாதங்களும் மத்திய அரசை குறை கூறுவது இயல்புதான். அதே நேரத்தில் வருடம் பூராவும் மத்திய அரசை திட்டிக்கொண்டிருந்தால் உங்களுடைய திட்டங்களை எப்படி நிறைவேற்றுவீர்கள் என்று கேட்டார் சசிகலா. நீங்க பெரியவங்களா? நான் பெரியவங்களா என்று பேசி சண்டை போட்டுக்கொண்டிருக்காமல் நம்பி வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். மத்திய அரசை அணுகி கேட்க வேண்டியதை கேட்டு சாதித்துக்கொள்ள வேண்டும். உங்கள் சண்டையால் நடுவில் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான்.

    பேரறிவாளன் விடுதலை

    பேரறிவாளன் விடுதலை

    பேரறிவாளன் விடுதலை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த சசிகலா. பேரறிவாளன் விடுதலைக்கும் இந்த நிகழ்வுக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்கிறார்கள். விசாரணை செய்த அதிகாரியை அதை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் சசிகலா தெரிவித்தார்.

    அதை எப்படி சொல்ல முடியும்

    அதை எப்படி சொல்ல முடியும்

    உங்கள் மீது மதிப்பு வைத்திருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இப்பொழுது ஓ.பன்னீர் செல்வம் உங்களிடம் பேசினாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அதை நான் எப்படி இவ்வளவு பேரிடமும் சொல்ல முடியும் என்று கேட்டு விட்டு சிரித்தார் சசிகலா.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+