இந்தியாவுக்கு தேசிய மொழி கிடையாது.. ஆர்டிஐ கேள்விக்கு மத்திய அரசு பதில்.. கனிமொழி வரவேற்பு!
சென்னை: இந்திய நாட்டிற்கு என்று தனியாக தேசிய மொழி கிடையாது என மத்திய அலுவல் மொழிகள் துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், மத்திய அரசிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால், அதற்கு இந்தியிலேயே பதில்கள் அனுப்பப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
எங்கும், இந்தி, எதிலும், இந்தி, என்று மத்திய பாஜக அரசு இந்தி திணிப்பை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது.

இந்தியில் பதில்கள்
இந்த நிலையில்தான், தென்காசி மாவட்ட சமூக ஆர்வலர் பாண்டியராஜாவிற்கு, யானைகள் மீது ரயில்கள் மோதல் தொடர்பாக ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு, சில வடமாநிலங்களின் ரயில்வே கோட்ட அதிகாரிகள் இந்தியில் பதில் அளித்திருந்தனர். மேலும் சிலரது கேள்விகளுக்கு இதே முறையில் பதில் அனுப்பப்பட்டிருந்தது.

ஆர்டிஐ கேள்வி
இதனால் அதிருப்தியடைந்தார் சமூக ஆர்வலர் பாண்டியராஜா. எனவே, இந்திய மொழிகள் சம்பந்தமாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். உள்துறை அமைச்சகம் இக்கேள்விகளை மத்திய அலுவல் மொழிகள் துறைக்கு அனுப்பியிருந்தது.

இந்தியாவுக்கு தேசிய மொழி இல்லை
அந்த துறையினர் தந்த பதிலில், "இந்தியாவிற்கு என தேசிய மொழி எதுவும் கிடையாது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினால், எந்த மொழியில் பதிலளிக்க வேண்டும் என்பது சம்பந்தமாக அலுவல் மொழிகள் துறை சார்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. தகவல் தரும் அதிகாரி ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு, இந்தியில் பதிலளித்தால் அவருக்கு எந்த தண்டனையும் கிடையாது. அலுவல் மொழி விதிகள் 1976 தமிழ்நாட்டிற்கு பொருந்தாது" என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் உறுதி செய்தது
ஏற்கனவே, பல வருடங்கள் முன்பு, குஜராத் உயர் நீதிமன்றமும், இந்தியாவுக்கு தனியாக ஒரு தேசிய மொழி கிடையாது என்று கூறியிருந்தது. இப்போது உள்ள மத்திய அரசும் இதை உறுதிப்படுத்தியுள்ளது. இதை தமிழ் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். அரசியல் சாசனச் சட்டத்தின் 343வது பிரிவின்படி இந்தியாவின் அதிகாரப்பூர்வ அலுவலக மொழி இந்தி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை வைத்துதான் இந்திரா காந்தி காலம் தொட்டு அடுத்தடுத்து பல அரசுகள் இந்தி திணிப்பை தீவிரப்படுத்தின. இப்போதுள்ள மத்திய அரசு இதில் மிக தீவிரம் காட்டியது. தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடகா, கேரளாவிலிருந்தும் அதற்கு எதிர்ப்புகள்கிளம்பியுள்ளன.

கனிமொழி வரவேற்பு
இதுகுறித்து கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், பல வருடங்களாக இதைத்தான் மத்திய அரசுக்கு நாங்கள் சொல்லி வருகிறோம். பிற மொழி நிதியைப் பயன்படுத்தி ஒரே ஒரு மதத்தை விளம்பரப்படுத்துவதை தயவு செய்து செய்யாதீர்கள். இவ்வாறு கனிமொழி கூறியுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications