மலராது.. தமிழகத்தில் தாமரை மலரவே மலராது.. பாஜகவை கலாய்க்கும் குஷ்பு டிவிட்டை பாருங்க!
தமிழகத்தில் எப்போதும் தாமரை மலராது என்று காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு டிவிட் செய்து இருக்கிறார்.
சென்னை: தமிழகத்தில் எப்போதும் தாமரை மலராது என்று காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு டிவிட் செய்து இருக்கிறார்.
பிரதமர் மோடியின் தமிழக வருகையால் தற்போது டிவிட்டர் பெரிய போர்க்களமாகி இருக்கிறது. அவருக்கு எதிராக டிவிட்டரில் #GoBackModi என்ற டேக் வைரலாகி வருகிறது.

இன்னொரு பக்கம் மோடிக்கு வருகையை ஆதரித்து #TNWelcomesModi டேக் வைரலாகி வருகிறது. இதில் பல பிரபலங்களும் டிவிட் செய்து வருகிறார்கள்.
Every time PM @narendramodi plans to step into TN, it becomes mandatory for the people to trend #GoBackModi .. one thing is clear, BJP and MODI have no place in TN. Thamarai Tamilnaattil malaraadhe.
— Khushbu Sundar.. (BJPwaalon ab thoda araam karlo) (@khushsundar) January 26, 2019
மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வர உள்ளார். இதனால்தான் இத்தனை பரபரப்பும்.
மோடியின் தமிழக வருகை குறித்து காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு டிவிட் செய்து இருக்கிறார்.
அதில், எப்போதும் பிரதமர் மோடி தமிழகத்தில் கால் வைக்க வேண்டும் என்று நினைத்தாலே மக்கள் எல்லோரும் சேர்ந்து #GoBackModi யை டிரெண்ட் செய்துவிடுகிறார்கள். ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரிகிறது.. தமிழகத்தில் பாஜகவிற்கோ மோடிக்கு துளி கூட இடம் கிடையாது... தமிழகத்தில் தாமரை மலராதே.. என்று கிண்டலாக குஷ்பு டிவிட் செய்துள்ளார்.
குஷ்பு மட்டுமில்லாமல் ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரும் திமுகவினரும் கூட மோடிக்கு எதிராக டிவிட் செய்து வருகிறார்கள். அதே சமயம் எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜகவினர் மோடியின் வருகைக்கு ஆதரவாக டிவிட் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications