"ஒத்த" தொகுதியா.. "என்ன நடந்தாலும்" நாங்க அதிமுக பக்கம்தான்..அழுத்தமாக சொன்ன கொங்கு.. திமுக அப்செட்
கொங்குவில் திமுகவுக்கு அபார வெற்றி கிடைக்கவில்லை
சென்னை: தமிழகத்தில் பெருவாரியான மண்டலங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.. ஆனால் கொங்குவில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் போய்விட்டது..!
நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களையும், 52 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டதுதான் கொங்கு மண்டலம்... இங்கு கவுண்டர், அருந்ததியர், தேவேந்திர் குல வேளாளர் மற்றும் சிறுபான்மையினரின் வாக்கு வங்கிகளே பிரதானம் ஆகும்.
கடந்த முறை தேர்தலில் திமுக, ஆட்சியை தவறவிட்டதற்கு இதே கொங்குதான் முக்கிய காரணம்.. எனினும், 2016 தேர்தலிலேயே திமுக கொங்கு மண்டலத்தில் தனது இருத்தலை அதிகப்படுத்தியிருந்தது திமுக.

கொங்கு வேளாளர்
எப்படி என்றால், 2011-தேர்தலில் இந்த மண்டலத்தில் திமுக வெற்றி பெற்ற இடங்கள் வெறும் 3தான்.. ஆனால், 2016-ல் திமுக கூட்டணி 10 தொகுதிகளை கைப்பற்றியிருந்தது... அதுமட்டுமல்லஇ, 80 சதவிகிதத்துக்கும் அதிகமான கொங்கு வேளாளர், கவுண்டர் சமூக மக்கள் வாக்குகளைக் கொண்ட ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக கடந்த 25 வருடமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

திமுக
அப்படி இருந்தும் 2016 தேர்தலில் கோட்டை விட்டது.. ஆனால் ரொம்ப குறைவான வித்தியாசத்தில்தான் தோற்றது.. இதற்கு திமுக நிர்வாகிகளும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.. இதற்கு பிறகுதான், அதாவது ஸ்டாலின் தலைமை பொறுப்புக்கு வந்தபிறகுதான் அதிரடிகள் கையில் எடுக்கப்பட்டன.. திமுக கூட்டணி கட்சிகள் கொங்கு பெல்ட்டில் மட்டும் 33-35 வரையிலான சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறும் என்று எக்ஸிட் போல் முடிவுகளும் சொல்லி இருந்தன..

வடக்கு மண்டலம்
ஆனால், இன்று காலையில், ஓட்டு எண்ணிக்கை ஆரம்பித்ததில் இருந்தே வடக்கு மண்டலத்தில் திமுக முன்னிலையில் உள்ளது.. தென்மண்டலத்திலும் திமுக முன்னிலையில் உள்ளது.. ஆனால் கொங்குவில் பிரம்மாண்ட வெற்றியை திமுகவால் பெறவில்லை.. குறிப்பாக, கோவையில், 10 தொகுதிகளில் 8 தொகுதிகளில் அதிமுக தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.. அதிலும், கடந்த முறை திமுக வெற்றி பெற்ற சிங்காநல்லுார் தொகுதியிலும் அதிமுக வேட்பாளர் ஜெயராமன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.

கார்த்திக்
அதேபோல திமுக வேட்பாளரும் வேட்பாளரும், எம்எல்ஏவுமான கார்த்திக், அதிமுக வேட்பாளர் வேட்பாளர் ஜெயராமனைவிட 3 ஆயிரம் ஓட்டுக்கள் குறைவாகவே பெற்று வருகிறார். இதனால், திமுக தரப்பு கடுமையான விரக்தியடைந்ததாகவும் சொல்கிறார்கள்.. காலையில் 3 சுற்று முடியும்போதே ஓட்டு எண்ணிக்கை மையத்திலிருந்து திமுக வேட்பாளர் கார்த்தி வெளியேறியும் விட்டாராம்.

மேட்டுப்பாளையம்
மேலும் கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளில் மேட்டுப்பாளையம் தொகுதியில் மட்டுமே திமுக முன்னிலை வகிக்கிறது. கோவை தெற்கில் பாஜக முன்னிலை வகிக்கிறது.. ஆக மொத்தம் அனைத்து மண்டலங்களிலும் திமுக அபார வெற்றி பெற்றாலும், கோவையில் திமுகவுக்கு ஒரு தொகுதி மட்டுமே கிடைக்குமென்ற நிலை ஏற்பட்டிருக்கிறது..

கட்டமைப்பு
இதையடுத்து, கோவையில் திமுகவின் கட்டமைப்பு மோசமானதாகவே உள்ளதாகவே நமக்கு தெரிகிறது.. இதுபோக, மேலும் திமுகவின் கவுண்டர்களுக்கு எதிரான நடவடிக்கையும் ஒரு காரணமாக இருக்கலாம்.. எனவே, கோவையை பொறுத்தவரை திமுக இன்னும் நிறைய உழைக்க வேண்டும் என்பது இன்றைய நிலவரம் மூலம் நமக்கு தெரியவருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications