சகோதரியா பார்த்தாங்க.. 5 மாசம் சேவை செஞ்சேன்.. இராஜபாளையம் கிடைக்காத வருத்தம்.. உருகும் கவுதமி!
சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு இராஜபாளையம் சீட் கிடைக்காத நிலையில்.. நடிகை கவுதமி டிவிட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். இராஜபாளையத்தில் பல நாட்களாக தேர்தல் பணிகளை செய்தும் சீட் கிடைக்காத வருத்தத்தில் இவர் இருக்கிறார்.
அதிமுக சார்பாக நேற்று 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஏற்கனவே 6 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று 171 வேட்பாளர்களை அதிமுக அறிவித்தது.
அதோடு தமிழகத்தில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகள் எவை என்றும், பாமகவிற்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகள் எது என்றும் அறிவிக்கப்பட்டது. இதில் பாமக 19 தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.

கவுதமி
இந்த நிலையில் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பாக கவுதமி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கவுதமிதான் இந்த தொகுதியில் தீவிரமாக தேர்தல் பணிகளை செய்து வந்தார். கடந்த இரண்டு மூன்று வாரமாக இங்கு கவுதமி தேர்தல் பணிகளை செய்து வந்தார்.

தேர்தல் பணிகள்
இங்கு இருக்கும் சாதி வாக்குகள், பாஜக ஆதரவு உள்ளிட்ட பல விஷயங்களை மனதில் வைத்து இவர் தேர்தல் பணிகளை செய்து வந்தார். பாஜக நிர்வாகிகள் பலரும் கூட இங்கே குவிக்கப்பட்டு கவுதமிக்காக தேர்தல் பணிகளை செய்து வந்தனர். ஆனால் இராஜபாளையம் தொகுதி பாஜகவிற்கு கொடுக்கப்படவில்லை.

தொகுதி இல்லை
இராஜபாளையம் தொகுதியில் அதிமுக சார்பாக இந்த முறை ராஜேந்திர பாலாஜி போட்டியிட உள்ளார். இதனால் கவுதமி தற்போது கடும் அதிர்ச்சியில் இருக்கிறார் என்கிறார்கள்.. கஷ்டப்பட்டு பார்த்த தேர்தல் பணிகள் எல்லாம் பயன் இல்லாமல் போய்விட்டதே என்ற வருத்தத்தில் இவர் இருக்கிறாராம்.
|
ட்வீ ட்
இதை பற்றி தற்போது கவுதமி ட்வீ ட் செய்துள்ளார்.. அதில், இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் உங்கள் வீட்டு மகளாக, சகோதரியாக உங்களில் ஒருவராக என்னை பாவித்து கடந்த 5 மாதங்களாக தங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்தீர்கள். என்றும் எனக்கு நீங்கள் காட்டிய உண்மையான அன்புக்கு தலைவணங்கி, உங்களுக்கு கட்டுப்பட்டிருக்கிறேன்.
|
உறுதி அளிக்கிறேன்
உங்கள் அன்பின் வாயிலாக கிடைத்த இந்த உறவானது என்றும் நிலைத்திருக்கும் என உறுதியளிக்கிறேன். நீங்கள் எவ்வாறு உயர்வான வாழ்க்கையை வாழ வேண்டுமோ அதற்காக உங்களுடன் என்றும் பாடுபடுவேன்.என்று ட்வீ ட் செய்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோரை டேக் செய்து கவுதமி இப்படி கலங்கி இருக்கிறார். .

பாஜக
பாஜக இந்த இராஜபாளையம் சீட்டை பெற கடுமையாக முயற்சி செய்தது. ஆனால் ராஜேந்திர பாலாஜி இந்த சீட் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். என்ன நடந்தாலும் இந்த சீட்டை பெறுவதில் உறுதியாக இருந்தார் இதையடுத்தே பாஜகவிற்கு இந்த சீட் மறுக்கப்பட்டது என்று கூறுகிறார்கள்.
-
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்!












Click it and Unblock the Notifications