சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"3வது அணி 2.0": விசிக, கம்யூனிஸ்ட், கமல், ரஜினியுடன் தயாராகிறதா கூட்டணி.. மாற்றம் வருமா தமிழகத்தில்?

தமிழகத்தில் 3வது அணி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஒரு இறுக்கமான சூழல் நிகழ்ந்து வருகிறது.. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில், அரசியல் கட்சிகளிடையே காணப்படும் இந்த இறுக்கம் பலவித திருப்பங்களையும், மாற்றங்களையும் உண்டுபண்ணும் என்றும் தெரிகிறது.. அந்த வகையில் 3வது அணி அமைவதற்கான வாய்ப்பும் பளிச்சிடுகிறது.

அதிமுகவை பொறுத்தவரை, இரட்டை தலைமை விவகாரம் உள்ளுக்குள் ஓடி கொண்டிருக்கிறது.. தேனி நோட்டீஸ் விவகாரத்தில் பொத்தாம் பொதுவான ஒரு அறிக்கை வெளியானாலும், முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் இனிதான் பிரச்சனை வெடித்து வெளியே வரும் என்று சொல்லப்படுகிறது.

10 வருஷத்துக்கும் இவர்தான் முதல்வர் என்று இப்போதே சொல்லிவிட முடியுமா? அந்த கருத்து மாறுபடும் என்பதே அதிமுகவின் ஒருபிரிவின் வாதம்.. இதில் சசிகலா ரிலீஸ் ஆகி வந்தால், இந்த குழப்பம் மேலும் அதிகமாகும்.. பிரச்சனை வலுக்கும்.. பிளவுகள் விரியும். அதனால் அது உட்கட்சி விவகாரம் என்றே எடுத்து கொள்வோம்!

கொரோனா இல்லையென்றால்... டாஸ்மாக் கடைக்கு எதிராக நானே போராட்டத்தில் குதித்திருப்பேன் -ராமதாஸ்கொரோனா இல்லையென்றால்... டாஸ்மாக் கடைக்கு எதிராக நானே போராட்டத்தில் குதித்திருப்பேன் -ராமதாஸ்

பாஜக

பாஜக

திமுகவை பொறுத்தவரை வலுவாகி கொண்டே வருகிறது.. வியூகங்களையும் மக்களை கவரும் வகையில் அமைத்து வருகிறது.. இதேசமயம், பாஜகவை பகிரங்கமாகவும், அளவுக்கு அதிகமாகவும் எதிர்க்காதது ஏதோ நெருடலை தருகிறது.. இந்துமதத்துக்கு எதிரானவர்கள் இல்லை என்ற மூவ்கள், பிகேவின் வருகை, அவரால் சீனியர்களுக்குள் அதிருப்தி என்றிருந்தாலும், காங்கிரசுடன் இணக்கமான போக்கு தற்போது இல்லை என்றே தெரிகிறது.

காங்கிரஸ்

காங்கிரஸ்

உங்கள்மீது சவாரி கொண்டுதான் காங்கிரஸ் ஒவ்வொரு முறையும் ஜெயித்து வருகிறது.. அது இனி எதற்கு என்று பாஜக தரப்பு சொன்னதாகவும், காங்கிரஸை திமுகவில் இருந்து கழட்டிவிட முனைவதாகவும் ஒரு செய்தி ஏற்கனவே கசிந்தது.. மேலும் அழகிரியின் சில வெளிப்படையான அதிருப்திகளும் கவனித்து பார்க்க வேண்டி உள்ளது.

சீமான்

சீமான்

சீமானை பொறுத்தவரை சுயம்புவாகவே இருக்கிறார்.. யாருடனும் அவர் கொள்கை ஒத்து போகவில்லை.. யாருடனும் சேர அவருக்கு இஷ்டமும் இல்லை. கமலை போலவே, அதிமுக, திமுக, பாஜக என்பது பொதுவான எதிரி என்றாலும், மநீம சேரவும், கூட்டணி வைக்கவும் வாய்ப்பே இல்லை என்று தெரிகிறது.

ராமதாஸ்

ராமதாஸ்

எந்த கட்சி அதிகமாக சீட் தருகிறதோ, அந்தகட்சியிடன் கூட்டணி என்பது பாமகவின் அணுகுமுறை.. இதைதான் ஒவ்வொரு தேர்தலிலும் புலப்பட்டு வருகிறது.. அதனால் திமுகவா, அதிமுகவா என்பதில்தான் பாமகவின் போக்கு இருக்கும்.

 விசிக

விசிக

அப்படியானால், அதிருப்திக்குள்ளாகி உள்ளவர்கள் யார் என்று பார்த்தால், விசிக, கம்யூனிஸ்ட்டுகள்தான்.. இவர்களுக்கும் கூட்டணிக்குள் சில கருத்து மோதல்கள் உள்ளன.. இந்த சூழலில்தான் 3வது அணி உருவாகுமோ என்ற நிலைமை ஏற்படுகிறது.. அப்படி ஏற்பட்டால், அதை தொடங்குவது கமலாகத்தான் இருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

 கமல்ஹாசன்

கமல்ஹாசன்

இதற்கு காரணம், மநீம இப்போதே களப்பணியில் இறங்கிவிட்டது.. கடந்த தேர்தலில், பெரம்பலூர், காஞ்சிபுரம் தொகுதிகளை தவிர்த்து, மற்ற 37 இடங்களில் போட்டியிட்டு 15,73,620 வாக்குகளை பெற்றது... வாக்கு சதவிகிதமோ 3.77 சதவிகிதம் ஆகும்... இதை பெருக்கும் நடவடிக்கையில் மநீம தற்போது இறங்கிவிட்டது.. இதற்காக கட்சி நிர்வாகிகளிடம் கமல் நிறைய பேசி வருகிறார்.. "திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாகத்தான் நம்ம கட்சி உருவாகியிருக்கிறது.. அதனால் இந்த இரு கட்சிகளுடனும் கூட்டணி வைப்பது குறித்தெல்லாம் யாரும் சிந்திக்கவேண்டாம்... தரப்பட்ட பொறுப்புகளை சரியாகச் செய்யுங்கள்" என்று அட்வைசும் தந்து வருகிறாராம்.

 பினராயி விஜயன்

பினராயி விஜயன்

அதேபோல, 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக கட்சிகளுடன் சேர்ந்து மநீம தேர்தலை சந்திக்க அதிக வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள்.. இதற்கு காரணம், பினராயி விஜயன் உள்ளிட்ட இடதுசாரித் தலைவர்களுள் கமலுடன் நெருக்கமாக உள்ளதால், எப்படியும் 2 கம்யூனிஸ்ட்டுகளும் கமலுடன் இணைவார்கள், அப்படி அவர்கள் வந்துவிட்டால், நிச்சயம் விசிகவும் வந்துவிடும் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல.. சென்ற தேர்தலில், யாரெல்லாம் படுதோல்வி அடைந்தார்களோ அவர்களும் கமலுடன் இணைவார்கள் என்கிறார்கள் மய்யத்தினர்!

 விஜயகாந்த்

விஜயகாந்த்

விஜயகாந்த் இதில் இணைவாரா என்று உறுதியாக தெரியவில்லை.. இப்படி 3வது அணி விவகாரத்தில், ரஜினியை தவிர்த்துவிட்டு நம்மால் யோசிக்க முடியாது.. கண்டிப்பாக கட்சி ஆரம்பிப்பதாக அவர் ஏற்கனவே சொல்லி உள்ள நிலையில், "மக்களின் நலனுக்காக தேவைப்பட்டால் இணைவோம்" என இவர்கள் சொல்லி உள்ள நிலையில், அதையும் இங்கு கவனிக்க வேண்டி உள்ளது.

Recommended Video

    BJP-உடன் AIADMK சேர்ந்தால் அவ்வளவு தான்-Mohan Kumaramangalam | Oneindia Tamil
    ரஜினி

    ரஜினி

    ஆனால், ரஜினி பாஜகவுடன் நிச்சயம் சேரமாட்டார் என்றும், அப்படி அவர் பாஜகவுடன் சேராத பட்சத்தில் நிச்சயம் விசிகவும் ரஜினியை ஏற்று கொள்ளவே செய்யும் என்கிறார்கள்... அதேசமயம், இவர்களுக்குள் யார் முதல்வர் என்ற விவகாரம் வெடிக்காது என்பதிலும் மய்யத்தினர் உறுதியாக இருக்கிறார்கள், ஆக மொத்தம், விசிக, கம்யூனிஸ்ட், கமல், ரஜினி.. என 3-வது அணி தமிழகத்தில் உருவாவதற்கான சாத்தியங்கள் தென்பட ஆரம்பித்துள்ளன... இவைகளை திமுகவும், அதிமுகவும், எப்படி எதிர்கொள்ளும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு!

    English summary
    third front fraternity: will MNM, VCK, commmunist join for upcoming tn assembly election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X