கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ்
நியூயார்க்: அமெரிக்காவின் தடைகள், இஸ்ரேலின் தாக்குதல்கள் என அடுத்தடுத்து அனல் பறந்த களத்தில், 'பொறுத்தது போதும்' என ஈரான் எடுத்திருக்கும் விஸ்வரூபம் உலகையே உலுக்கியிருக்கிறது. அயதுல்லா அலி காமேனியின் மறைவுக்குப் பின், ஈரான் காட்டியிருக்கும் இந்த 'மிரட்டல்' ஆட்டம், உலகப் பொருளாதாரத்தின் ரத்த நாளத்தையே கிள்ளிப் பார்த்திருக்கிறது. என்ன நடக்கிறது வளைகுடாவில்?
கடந்த சில தசாப்தங்களாகவே ஈரான் ஒரு 'தனிமைப்படுத்தப்பட்ட' தேசமாகவே பார்க்கப்பட்டது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் ஒருபுறம், இஸ்ரேலின் அவ்வப்போதைய ஏவுகணைத் தாக்குதல்கள் மறுபுறம் என ஈரான் ஒரு நெருப்பு வளையத்திற்குள்ளேயே வாழ்ந்து வந்தது. ஆனால், அப்போதெல்லாம் ஈரான் செய்யாத ஒரு காரியத்தை, இப்போது செய்திருக்கிறது. அதுதான்-ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கம்!

காமேனி எனும் 'கடைசி செங்கல்'
பிப்ரவரி 28, 2026... ஈரான் வரலாற்றில் கருப்பு தினம். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட செய்தி, அந்த தேசத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்தது. "ஈரான் இத்துடன் முடிந்தது" என மேற்கத்திய நாடுகள் கணக்குப் போட்ட வேளையில், அங்கிருந்து கிளம்பியது அந்த 'மெகா' பதிலடி.
காமேனியின் மறைவைத் தொடர்ந்து, ஈரானின் இடைக்காலத் தலைமை ஒரு அதிரடி முடிவை எடுத்தது. "எங்கள் தலைவரின் உயிருக்குக் கைவைத்தவர்களுக்குப் பாடம் புகட்டுவோம்" எனச் சொல்லி, உலக எண்ணெய் வர்த்தகத்தின் உயிர்நாடியான ஹார்முஸ் ஜலசந்தியை அதிரடியாக மூடியிருக்கிறது ஈரான்.
ஏன் இந்த ஹார்முஸ் ஜலசந்தி இவ்வளவு முக்கியம்?
உலகில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய்களில் கிட்டத்தட்ட 20% முதல் 30% வரை இந்தப் பாதையில்தான் பயணிக்கிறது. ஒரு நாளைக்குச் சுமார் 2 கோடி பேரல் எண்ணெய் கடந்து செல்லும் இந்த குறுகிய பாதையை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
"இதுவரை ஈரான் அமைதி காத்தது அதன் பலவீனம் அல்ல, பெருந்தன்மை. இப்போது அந்தப் பெருந்தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது" என்கிறார்கள் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள்.
ஸ்தம்பித்த உலகம்... எகிறும் பெட்ரோல்!
ஈரானின் இந்த முடிவால், கடந்த சில நாட்களாகவே சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. ஒரு பேரல் விலை $100-ஐத் தாண்டி $120-ஐ நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
இந்தியாவின் எரிவாயு (LPG) தேவையில் 50%-க்கும் மேல் இந்தப் பாதையை நம்பியே இருக்கிறது. தற்போது நிலவும் தட்டுப்பாட்டால், இந்தியாவில் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் விலைகள் வரலாறு காணாத உச்சத்தைத் தொடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நிலை: ட்ரம்ப் நிர்வாகம் "நாங்கள் போரை வென்றுவிட்டோம்" என்று முழங்கினாலும், ஹார்முஸ் முடக்கத்தால் அமெரிக்காவின் பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்து வருகின்றன.
ஈரானின் நிபந்தனைகள்:
"நாங்கள் அமைதியை விரும்புகிறோம், ஆனால் அடிமைத்தனத்தை அல்ல" என முழங்கும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், ஜலசந்தியைத் திறக்க மூன்று நிபந்தனைகளை விதித்திருக்கிறார்:
- ஈரானின் இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும்.
- கடந்த காலத் தாக்குதல்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
- இனி வரும் காலங்களில் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
ஈரான் இத்தனை காலம் பொறுமையாக இருந்தது உலக நாடுகளுக்கு ஒரு வாய்ப்பாகவே அமைந்தது. ஆனால், அதன் தலைவரையே குறிவைத்த பின், அந்த தேசம் தனது 'உண்மையான பலத்தை' உலகிற்குப் பறைசாற்றியிருக்கிறது. ஜலசந்தியில் நிறுத்தப்பட்டுள்ள ஈரானின் கண்ணிவெடிகளும், ஏவுகணைகளும் வல்லரசு நாடுகளின் கப்பற்படைகளையே அச்சுறுத்தி வருகின்றன.
இது வெறும் போர் அல்ல; இது உலக நாடுகளுக்கு ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை. அமெரிக்காவும் இஸ்ரேலும் போரைத் தொடங்கின, ஆனால் அதை எப்படி முடிப்பது என்பதை இப்போது ஈரான்தான் தீர்மானித்துக் கொண்டிருக்கிறது!
-
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி












Click it and Unblock the Notifications