Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துப்பாக்கிச் சூடு..பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு,குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை..முதல்வர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், முன்னாள் ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள், போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்த நிலையில், வன்முறை மற்றும் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக்குழு 3000 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை கடந்த மே மாதம் 18ந் தேதி தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்தது. அதில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாகவும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் மறைந்து இருந்து துப்பாக்கியால் சுட்டனர். குண்டு வருவது தெரியாமால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். பூங்காவில் ஒளிந்து கொண்டும், வாகனங்களின் மேல் படுத்துக் கொண்டும் போலீசார் சுட்டனர். கலைந்து ஓடியவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. தொலைவில் இருந்து சுடக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஒரு போலீசாருக்கும் படுகாயம் இல்லை.

கொடூரமான செயல்

கொடூரமான செயல்

போலீசாரின் துப்பாக்கிச்சூடு சம்பவம் கொடூரமான செயல். போலீசார் வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர் காவல் துறை தலைமையின் அப்பட்டமான தோல்வி என்பதோடு, போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் மிக அலட்சியமாக அணுகியுள்ளார். பொறுப்புகளை தட்டிக் கழித்துவிட்டு கோவில்பட்டியில் இருந்துள்ளார் ஆட்சியர். ஆட்சியர் எவ்வித யோசனையும் இல்லாமல் முடிவுகளை எடுத்துள்ளார்.

அருணா ஜெகதீசன் அறிக்கை

அருணா ஜெகதீசன் அறிக்கை

வீட்டில் இருந்துகொண்டே சமாதான கூட்டத்திற்கு தலைமை தாங்க உதவி ஆட்சியரை அனுப்பியுள்ளார். ஒரு போலீஸ்காரர் மட்டும் 17 ரவுண்ட் சுட்டுள்ளார். ஒரே போலீசாரை 4 இடங்களில் சுட வைத்துள்ளனர். தென்மண்டல ஐ.ஜி சைலேஷ் குமார் யாதவ், டிஐஜி கபில்குமார் சரத்கர், எஸ்.பி மகேந்திரன், துணை எஸ்.பி லிங்கத் திருமாறன், ஆய்வாளர்கள் திருமலை, ஹரிஹரன் பார்த்திபன், துணை ஆய்வாளர்கள் சொர்ணமணி, ரென்னெஸ், முதல் நிலை காவலர்கள் சங்கர், சுடலைக்கண்ணு, சதீஷ்குமார், கண்ணன், தலைமை காவலர் ராஜா, இரண்டாம் நிலை காவலர்கள் ராஜா, தாண்டவமூர்த்தி, காவலர் மதிவாணன் உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

சட்டசபையில் இன்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை மீதான விவாதத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை அதிமுக அரசு உரிய முறையில் கையாளவில்லை. 11 ஆண்கள், 2 பெண்கள் என பட்டப்பகலில் துள்ளத் துடிக்க சுட்டுக் கொல்லப்பட்டனர், 40 பேர் படுகாயமடைந்தனர், 60 பேர் சிறு காயமடைந்தனர்.

பலியான உயிர்கள்

பலியான உயிர்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அதிமுக அரசின் ஆணவத்திற்கு 13 உயிர்கள் பலியாகின என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேட்போரை ரத்தம் உறையவைக்கும் சம்பவம் குறித்து தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்டதாக கூறியது உண்மைக்கு மாறானது.

மிகப்பெரிய பொய்

மிகப்பெரிய பொய்

கடப்பாரையை விழுங்கிவிட்டு கசாயம் குடித்துவிட்டேன் என்று கூறும் பழமொழியை விட மிகப்பெரிய பொய் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையமே எடப்பாடி பழனிச்சாமி சொன்ன அந்த பொய்யை அம்பலப்படுத்தியுள்ளது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ரூ.5 லட்சம் கூடுதல் இழப்பீடு

ரூ.5 லட்சம் கூடுதல் இழப்பீடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ஏற்கனவே தலா ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது. துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்டோருக்கு கல்வி தகுதிக்கேற்ப வேலையை அதிமுக ஆட்சி வழங்கவில்லை எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

குற்றவாளிகளுக்கு தண்டனை

குற்றவாளிகளுக்கு தண்டனை

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 4 போலீசார் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறிய முதல்வர் ஸ்டாலின், முன்னாள் ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள், போலீசார் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். குற்றவாளிகள் அனைவரும் கூண்டில் ஏற்றி தண்டிக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+