பாஜகவின் ‘துணிவு’ சேலஞ்ச்.. 1 டூ 1 ஃபைட்டுக்கு ரெடியாகும் அண்ணாமலை.. 4 பாயிண்டுகள்! பிளான் இதானா?
சென்னை : 'துணிவு' ட்ரெய்லர் வெளியாகியிருக்கும் நாளில் துணிவாக திமுகவுக்கு சவால் விட்டுள்ளது பாஜக. பாஜக தனித்துப் போட்டியிடத் தயங்காது, கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா ? என அதிரடியாக சவால் விட்டுள்ளார் அண்ணாமலை. தமிழ்நாட்டில் 25 சீட்களில் வெற்றி பெறுவோம் என்றும் அண்ணாமலை பேசி வருகிறார். இதனால், அதிமுக கூட்டணியில் இருந்து அக்கட்சி விலகக்கூடும் எனக் கூறப்படும் நிலையில், திமுகவுக்கு பாஜக விடுத்துள்ள இந்த சவாலே, பாஜக தனித்துப் போட்டியிடும் திட்டத்தோடு ரெடியாகிவிட்டது என்பதற்கான அடையாளம் தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
தமிழகத்தில் திமுக என்ற கட்சி ஆரம்பித்ததில் இருந்து இதுவரை தனித்து போட்டியிடாத நிலையில் பாஜகவை பார்த்து தனித்துப் போட்டியிட தயாரா என கேள்வி எழுப்பி இருப்பது வேடிக்கை என பாஜகவினர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் பிடிஐ-க்கு பேட்டியளித்த முதல்வர் ஸ்டாலின், அதிமுகவை பாஜக பயமுறுத்தி குளிர்காய்கிறது, தமிழ்நாட்டில் பாஜகவால் சொந்தக்காலில் நின்று வெற்றி பெற முடியாது என விமர்சித்திருந்தார். இந்நிலையில், அதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக கடந்த காலங்களில் தனித்துப் போட்டியிட்டதுண்டு. அதை மீண்டும் செய்யத் தயங்காது. திமுக தனித்துப் போட்டியிட தயாரா என சவால் விடுத்துள்ளார்.

பாஜக - அதிமுக கூட்டணி
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் நீடித்தது பாஜக. அதன் மூலம் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன்பிறகு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும், கூட்டணி தொடர்வதாகவே பாஜக, அதிமுக இரு கட்சிகளும் கூறி வருகின்றன. எனினும், ஈபிஎஸ் அணியின் சில நிர்வாகிகள் பாஜக கூட்டணிக்கு எதிராகப் பேசி வருகின்றனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் வரும் தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று ஒரு இடத்திலும், தமிழ்நாட்டில் பாஜக 25 இடங்களில் வெல்லும் என்று மற்றொரு இடத்திலும் பேசி வருகிறார். இதனால், பாஜகவின் நிலைப்பாடு குறித்து தெளிவான நிலை இல்லை.

கூட்டணியில் புகைச்சல்
அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பியுமான சி.வி.சண்முகம், நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக பாஜகவுடன் கூட்டணி அமையவுள்ளது உள்ளது என்றும் திமுகவுடன் கூட்டணி வைத்தவர்கள் ஓடப் போகிறார்கள என்றும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாராயணன் திருப்பதி உள்ளிட்டோரும் கருத்து தெரிவித்தனர். இதனால், கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டது. இதற்கிடையே, அதிமுகவுடனான கூட்டணி தொடர்பாக அண்ணாமலை மாறுபட்ட நிலைப்பாட்டை எட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது.

பாஜக தலைமை - அண்ணாமலை
கூட்டணி தொடர்பாக பாஜக டெல்லி தலைமையே முடிவெடுக்கும் என்றாலும், அண்ணாமலை தனித்துப் போட்டியிட விரும்புவதாகவே கூறப்படுகிறது. பத்துக்கும் குறைவான தொகுதிகளில் போட்டியிட்டு ஒருசில இடங்களில் வெல்வதை விட, அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வாக்கு சதவீதத்தை உயர்த்துவதே அண்ணாமலையின் விருப்பம் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும், தனித்துப் போட்டியிட தயாராக இருக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் அண்ணாமலை. இதன் மூலம் தனித்துப் போட்டியிடும் யோசனையில் அண்ணாமலை தீவிரமாக இருப்பது உறுதியானது.

தனித்து நின்றால் 1 சீட் கூட
இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின், பாஜகவை சீண்டிவிட்டுள்ளது தனித்துப் போட்டியிடும் அண்ணாமலையின் முடிவுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சமீபத்தில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், குஜராத் மாநிலத் தேர்தலை வைத்து பாராளுமன்ற தேர்தலின் முடிவை தீர்மானிக்க முடியாது என்றும் குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றாலும் டெல்லி மாநகராட்சி தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது என்றும் நாடு முழுவதும் பாஜகவுக்கு ஆதரவு நிலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, தமிழ்நாட்டில் பாஜக தனித்து நின்றால் அவர்களால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

திமுக + அதிமுக சவாரி
மேலும், "அதிமுகவை பாஜக பயமுறுத்தி குளிர்காய்கிறது. தமிழ்நாட்டில் பாஜக பிரதான எதிர்க்கட்சி அல்ல. சொந்தக்காலில் நின்று அவர்களால் வெற்றி பெற முடியாது. 2001 மாநில சட்டமன்றத் தேர்தலில், அக்கட்சி திமுகவின் தோளில் ஏறி நான்கு எம்.எல்.ஏக்களைப் பெற்றது. இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு அ.தி.மு.கவின் முதுகில் சவாரி செய்து 2021ல் மீண்டும் நான்கு எம்.எல்.ஏக்களைப் பெற்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை பா.ஜ.கவின் பலம் இதுதான்" எனத் தெரிவித்திருந்தார்.

பலம் இல்லை
மேலும், "அதிமுகவை பயமுறுத்தி, பணிய வைத்து அதில் குளிர்காய நினைக்கிறது பாஜக. மற்றபடி, தமிழ்நாட்டில் அவர்கள் வளரவில்லை. பாஜக வளராமல் பாஜகவினரே பார்த்துக் கொள்வார்கள். மேலும், மத்தியில் ஆளும்கட்சியாக இருப்பதால் இங்கு பப்ளிசிட்டி தாராளமாக தரப்படுகிறதே தவிர, தமிழ்நாட்டில் அவர்களுக்கு இருக்கும் பலத்தை வைத்து அல்ல. தேர்தல் வெற்றிக்காக பாஜக எந்தவித இழிவான காரியத்தையும் செய்வார்கள்" என ஸ்டாலின் பாஜகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

கூட்டணி சேர்ந்தும் தோல்வி
இந்நிலையில் இதுகுறித்து இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது அதன் சொந்த பலத்தில் அல்ல. சுதந்திரா கட்சி மற்றும் சிபிஎம் கட்சிகளினுடனான கூட்டணியின் காரணமாகதான் திமுக ஆட்சிக்கு வந்ததது. 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் அதன் தனி பலத்தால் அல்ல. 12 கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் மட்டுமே. 1967லிருந்து, திமுக ஒரு தேர்தலில் கூட தனித்துப் போட்டியிட்டதில்லை. தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தே போட்டியிட்டிருக்கிறது. இப்படி பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தும், நீங்கள் படுமோசமான தோல்வியை சந்தித்த தேர்தல்களும் உண்டு என விமர்சித்துள்ளார்.

இனியும் தயங்க மாட்டோம்
மேலும், ஸ்டாலின் அவர்களே துணைப் பிரதமராகும் உங்களின் லட்சியம் கலைந்து போய் நெடுங்காலம் ஆகிவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக 2024ஆம் ஆண்டு தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும். பாஜக கடந்த காலங்களில் தனித்துப் போட்டியிட்டதுண்டு. இனி வரும் காலங்களில், அதை மீண்டும் செய்யத் தயங்காது. நான் உங்களுக்கு சவால் விடுகிறேன் மு.க ஸ்டாலின், கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா?" என்று பகிரங்கமாக சவால் விடுத்தார் அண்ணாமலை.

தைரியமில்லாத திமுக
பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தில் தனித்து போட்டியிட்டால் பாஜக ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது - முதல்வர் மு.க.ஸ்டாலின். 'ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை' என்பது போல், இதுவரை வெற்றி பெற்ற ஒரு தேர்தலில் கூட தனித்து போட்டியிட தைரியம் இல்லாத, திராணி இல்லாத, தெம்பில்லாத ஒரு கட்சி திமுக. 2014ல் கூட்டணி வைத்து போட்டியிட்டும் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாத கட்சி திமுக. சவால் விடுகிறோம். திமுகவுக்கு தைரியமிருந்தால், தெம்பிருந்தால், திராணியிருந்தால் 2024 தேர்தலில் தனித்து போட்டியிடட்டும்" என சவால் விடுத்துள்ளார்.

4 பாயிண்டுகள்
இதன் மூலம், பாஜக, தனித்துப் போட்டியிட உறுதியாக முடிவெடுத்துவிட்டது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். பாஜகவின் இந்த சவால் மூலம் அக்கட்சிக்கு தற்போது 4 பாயிண்டுகள் கிடைத்திருக்கின்றன.
1. தனித்துப் போட்டியிட்டு பாஜகவால் 1 சீட் கூட ஜெயிக்க முடியாது என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுப்பது.
2. திமுக இதுவரை தனித்துப் போட்டியிட்டு வென்றதில்லை, அக்கட்சிக்கு பாஜகவை விமர்சிக்க தகுதியில்லை எனச் சீண்டுவது
3. திமுகவையும் தனித்துப் போட்டியிடுமாறு சவால் விடுவதன் மூலம் திமுகவுக்கு நெருக்கடி கொடுப்பது. அதன்மூலம் திமுக கூட்டணியை கலகலக்கச் செய்வது.
4. பாஜகவுக்கு ஸ்டாலின் விடுத்த சவாலை ஏற்று, 2024 தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தனது முடிவை அண்ணாமலை செயல்படுத்துவது.

துணிவு சேலஞ்ச் - 1 டூ 1 ஃபைட்
'துணிவு' திரைப்பட ட்ரெய்லர் ரிலீஸ் ஆகியிருக்கும் இன்றைய நாளில், திமுகவுக்கு துணிவு இருந்தால் தனித்துப் போட்டியிடட்டும் என சவால் விட்டிருக்கிறது பாஜக. ஏற்கனவே, அதிமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் இருந்து வரும் அண்ணாமலைக்கு, தனது திட்டத்தை செயல்படுத்த ஸ்டாலினின் பேச்சு உதவியுள்ளது. தனித்துப் போட்டியிட்டு, இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் வாக்கு சதவீதத்தைப் பெற்று தனது பலத்தை தலைமைக்கு தெரியப்படுத்தவும் அண்ணாமலைக்கு இந்த முயற்சி உதவும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
-
அண்ணாமலைக்கு 'கல்தா'.. எடப்பாடியின் செல்லப்பிள்ளைகளுக்கு 'சீட்' .. பாஜகவின் திடீர் முடிவு.. ஏன்? -
அண்ணாமலைக்கு புதிய ‘ரோல்'..தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக கொடுத்த முக்கிய ‘அசைன்மென்ட்' -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
ஊருக்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை பாஜக நிர்வாகி முரளீதரன்! நயினார் எடுத்த ஆக்ஷன்! -
வேட்பு மனு தாக்கலின்போதே திமுக தவெக கட்சியினர் மோதல்.. ராமநாதபுரத்தில் பரபரப்பு! -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications