"அக்கா, ஜெயில்ல பெரிய உருண்டை தருவாங்க.. உருளைக்கிழங்கு கிடைக்கும்" சூர்யாவுக்கு திவ்யா தந்த அட்வைஸ்

ரவுடிபேபி சூர்யாவுக்கு அறிவுரை சொல்லி திவ்யா வீடியோ வெளியிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயிலுக்கு போன டிக்டாக் திவ்யா, ஜெயிலுக்கு இப்போது போயுள்ள ரவுடிபேபி சூர்யாவுக்கு ஆறுதல் சொல்லி வீடியோ பதிவிட்டுள்ளார்..!

டிக்டாக்கில் பிரபலமாக இருந்தவர் திவ்யா.. டிக்டாக் தடை செய்யப்பட்ட பிறகும்கூட, வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.. ஒருகட்டத்தில் இவர் மீது புகார் எழவும், போலீசாரும் திவ்யாவை தேட ஆரம்பித்தனர்.

தன்னுடைய செல்போன் எண்ணைவைத்து டிராக் செய்து பின்தொடர்வதைத் தெரிந்துகொண்ட திவ்யா தஞ்சை, சென்னை, வடலூர், பாண்டிச்சேரி போன்ற இடங்களுக்கு மாறி மாறி சுற்றி கொண்டே இருந்தார்..

கைது

இறுதியில் நாகபட்டினத்தில் திவ்யாவை சுற்றி வளைத்த போலீஸார் அவரைக் கைது செய்தனர்.. இதன்பிறகு ஜாமீனில் வெளிவந்த அவர், அப்போதும் நிறுத்தாமல் வீடியோ பதிவிட்டு வருகிறார்.. அதையும் அவர் ரசிகர்கள் பார்த்து கொண்டுதானிருக்கிறார்கள்.. அந்த வீடியோக்களில் எதைஎதையோ புலம்பி கொண்டே இருப்பார் திவ்யா.. இந்நிலையில் கார்த்திக்கை தேடிக் கொண்டிருந்த திவ்யா, டிக்டாக் சூர்யா குறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்...

சூர்யா

சூர்யா

டிக்டாக்கில் பிரபலமான ரவுடி பேபி சூர்யா, ஆண் நண்பருடன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்... ஆபாசமாக பேசுவது, பிறரை திட்டுவது என்று புகார் சூர்யா மீது எழுந்தது... இந்த மாதிரி ஆபாச பேச்சுக்கள் வீடியோக்களினால், குழந்தைகள், மாணவர்கள் கெட்டுப்போக வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் சொல்லி வந்த நிலையில், ரவுடி பேபி சூர்யா கைதானார்.

தைரியம்

தைரியம்

சிறையில் உள்ள சூர்யாவுக்கு, திவ்யா வீடியோ வெளியிட்டு சொன்னதாவது: "அக்கா, நீ ஒன்னும் கவலைப்படாதே.. நீ கண்டிப்பா வெளியே வந்துடுவே.. உனக்கு 7 கேஸ் போட்டிருக்காங்க.. எனக்கும் 7 கேஸ் போட்டாங்க.. நானே வெளியே வரலையாக்கா.. 3 முறை ஜெயிலுக்கு போயிட்டு இப்போ ஹாயா சுத்திட்டு இருக்கேன்.. 15 நாளில் பெயில் கிடைச்சிடும்.. கவலைப்படாதேக்கா.. முதல்முறையே உனக்கு பெயில் கிடைச்சிடும்..

 அங்கேயே இரு

அங்கேயே இரு

சூர்யா அக்கா, நீ நல்ல நாளில் ஜெயிலுக்கு போயிருக்க.. நீ அங்கேயே இருந்துக்கோ.. வெளியே வந்தால் நமக்கு வீடு தர மாட்டாங்க.. இன்னைக்கு பாரு புதன்கிழமை.. அங்கே தேங்காய் சோறு, ரசம் எல்லாம் கிடைக்கும்.. ஆனால், இதெல்லாம் சென்ட்ரல் ஜெயில்லதான் கிடைக்கும்.. சென்ட்ரல்ல நிறைய கிடைக்கும்.. சப் ஜெயிலில் குறைவாதான் சாப்பாடு கிடைக்கும்..

Recommended Video

    வசமாக சிக்கிய Rowdy Baby Surya-Chikka | Oneindia Tamil
     உருளைக்கிழங்கு

    உருளைக்கிழங்கு

    ஆனால், வாரத்தில் ஒருநாள் பெரிய உருளைக்கிழங்கு உருண்டை ஒன்னு தருவாங்க.. நீ வெளியே வந்து என்னக்கா செய்ய போறே? என்னை மாதிரிதான் கஷ்டப்படணும்.. இதுக்கு பேசாமல் நீ ஜெயிலிலேயே இருந்துக்கோ.. என்று ஆறுதலும், அறிவுரையும் தந்துள்ளார்.. இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது... இந்த வீடியோவிலும் ஏராளமானோர் திரண்டு கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+