சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வம்புசண்டைக்கு வர்றீங்களா?மோடி முன்பாக போட்டி அரசியலா? முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிட மாடல் குறித்து விளக்கமாக பேசியதற்கும் ஒன்றிய அரசு என மத்திய அரசை குறிப்பிட்டதற்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ரூ31,400 கோடி திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்றார். சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

TN BJP Chief Annamalai condemns CM MK Stalins Speech

இதில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய- மாநில அரசுகள் உறவு, கூட்டாட்சி தத்துவம், திராவிட மாடல் என்றால் என்ன? என்பது குறித்து விரிவாக பேசினார். மேலும் மத்திய அரசு என குறிப்பிடாமல் அழுத்தம் திருத்தமாக பலமுறை ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டார் முதல்வர் ஸ்டாலின். முதல்வர் ஸ்டாலினின் இந்த பேச்சை திமுக மற்றும் திராவிடர் இயக்க ஆதரவாளர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். பாஜகவுடன் திமுக அரசு இணக்கமாக செல்கிறது என்கிற விமர்சனங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் எனவும் பதிலடி தந்து வருகின்றனர் திமுகவினர்.

இதனிடையே சென்னை நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை நேற்று இரவு செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசிய அனைத்துமே பொய். அனைத்துமே முன்னுக்குப் பின் முரணானவை. அதனால்தான் திராவிட மாடல் என்று பொய் சொன்னார்.

நீட் தேர்வு, 16 முறை ஒன்றிய அரசு, திராவிட மாடல்-விமர்சனங்களை துவம்சம் செய்த முதல்வர் ஸ்டாலின் பேச்சு நீட் தேர்வு, 16 முறை ஒன்றிய அரசு, திராவிட மாடல்-விமர்சனங்களை துவம்சம் செய்த முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழகத்துக்கும் தமிழ் மண்ணுக்கும் ரூ31,000 கோடி கொண்டு வந்த பிரதமர் மோடியை மேடையில் உட்கார வைத்து கொண்டு, ஆளும் கட்சிகாரர் நீங்களே பாஸ் போட்டுகிட்டு, பணம் கொடுத்து ஒரு ஒரு எம்.எல்.ஏ.வுக்கும் டார்கெட் கொடுத்து ஒவ்வொருத்தரும் 200 பேரை கொண்டுவாங்கன்னு நேரு ஸ்டேடியத்துல உட்கார வெச்சு என்ன விளையாட்டு காட்டுறீங்களா? இதுதான் அரசு நடத்தும் விதமா?

என்ன வம்பு சண்டைக்கு வர்றீங்களா? இதென்ன போட்டியா? இதென்ன போட்டி அரசியலா? ஒரு பிரதமருக்கு என மரியாதை இருக்கு. அது மிக முக்கியம். தமிழ் மண்ணில் இந்த நாள் எந்த கட்சி, எந்த ஆட்சியாக இருந்தாலும் பிரதமரை மதித்திருக்கிறோம். பாஜகவுக்கும் திமுகவுக்கும் 360 டிகிரி கொள்கை வேறுபாடு உண்டு. ஆனால் முதல்வர் என்பவரை நாம் மதிப்போம். முதல்வரை நாம் எங்கேயும் விட்டுக் கொடுக்கமாட்டோம். ஆனால் நீங்கள் இப்படி ஒரு கலாசாரத்தை செய்துவிட்டு திராவிட மாடல் என பொய் சொல்கிறீர்கள்.

முதல்வர் ஸ்டாலின் நடந்து கொண்ட விதம் தமிழக அரசியலில் கரும்புள்ளி. முதல்வர் ஸ்டாலின் பேசிய ஒவ்வொரு பாயிண்ட்டுக்கும் பாஜக பதில் தரும். வெள்ளிக்கிழமை மாலைக்குள் பாஜக பதிலடி தரும். கச்சத்தீவை எப்படி கொண்டுவரனும்? மீட்கனும் என்பது எங்களுக்கு தெரியும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

English summary
Tamilnadu BJP Chief Annamalai has condemned Chief Minister MK Stalin Speech in PM Modi's Function.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X