• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"வார்ரே வா".. இதெல்லாம் உண்மைதானா.. இப்படித்தான் பாஜக அட்டாக் பண்ணப் போகுதா.. பதற வைக்கும் லிஸ்ட்!

|

சென்னை: தமிழக பாஜக ஒரு உத்தேச பட்டியலை டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறி ஒரு லிஸ்ட் உலா வருகிறது.. இதன் உண்மைதன்மை நமக்கு முழுசுமாக தெரியவில்லை என்றாலும், அந்த லிஸ்ட் எண்ணற்ற தகவல்களை நமக்கு தெரியப்படுத்துகிறது.. அதிமுக, திமுகவுக்கும் ஏதோ ஒரு செய்தியை சொல்வது போலவும் தென்படுகிறது!

அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ளது.. அவ்வளவுதான்.. இது ஒன்றை தவிர, பாஜகவுக்கு எத்தனை சீட், என்னென்ன தொகுதிகள் என்பதெல்லாம் முடிவாகவில்லை. ஆனால், அதற்குள் 38 தொகுதிகளுக்கான வேட்பாளர் லிஸ்ட்டை பாஜக தயார் செய்து, அதை மேலிடத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக செய்திகள் பரவுகின்றன.

அந்த லிஸ்ட்டை எடுத்து கொண்டால், ஒருசில முக்கிய தொகுதிகளை பாஜக குறி வைத்து காய் நகர்த்துவது தெரிகிறது.. குறிப்பாக, திமுக தலைவரின் ஸ்பெஷல் தொகுதியான கொளத்தூரில் ஏஎன்எஸ் பிரசாத் போட்டியிடுகிறாராம்.. இந்த தொகுதியை பொறுத்தவரை ஸ்டாலின் அளவுக்கு அதிகமாகவே செய்து, தன் கைப்பிடியில் தொகுதியை இறுக்கமாக வைத்திருக்கிறார்..

சீமான்

சீமான்

இதெல்லாம் தெரிந்தும்தான், ஸ்டாலின் எங்கு போட்டியிட போகிறாரோ அங்குதான் நானும் போட்டியிடுவேன் என்று ஒத்தைக்காலில் நின்று வருகிறார் சீமான்.. இந்த போட்டிக்கு நடுவில் பாஜகவின் பிரசாத் இணைகிறார்.. ஏற்கனவே சீமானை பாஜகவின் பி-டீம் என்று ஒரு தரப்பு விமர்சித்து வரும் நிலையில், அது உண்மையாகும் பட்சத்தில் சீமானும், பிரசாத்தும் சேர்த்து ஸ்டாலினின் வாக்குகளை பிரிப்பார்களா என்ற சந்தேகம் எழுகிறது! கூடவே அதெல்லாம் முடியுமா என்ற ஆச்சரியமும் கூடவே எழுகிறது.

 சீமான்

சீமான்

அதேபோல, உதயநிதியை விரட்டு விரட்டு என்று விரட்டி கொண்டிருக்கும் குஷ்புவின் பெயர் சேப்பாக்கம் -திருவல்லிகேணி தொகுதியில் இடம் பெற்றுள்ளது.. இந்த தொகுதி முஸ்லிம் வாக்காளர்கள் நிறைந்த தொகுதி.. இவர்கள்தான் தொகுதியின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்கள்.. திமுகவின் கோட்டை என்று சொல்லப்படுவதுதால், உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கத்தை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார்..

 பாஜக பொறுப்பு

பாஜக பொறுப்பு

அதனாலேயே குஷ்புவை அங்கு பொறுப்பாளராக சில நாட்களுக்கு முன்பு நியமித்தது பாஜக.. இது போதாமல், அங்கு சீட்டையும் ஒதுக்கி உள்ளது... முஸ்லிம் வாக்கு + பாஜகவின் முழு சப்போர்ட் போன்றவை உள்ள தைரியத்தினாலேயே உதயநிதிக்கு, குஷ்பு தினந்தோறும் செக் வைத்து வருகிறார்.. இதனிடையே குஷ்புவின் ஓட்டுக்களை சிதறடிக்கவே ஓவைசியுடன் கூட்டணி வைக்க உதயநிதி ஆசைப்படுகிறார் என்பது வேறு விஷயம்.. இந்த தொகுதியில் பாஜக கை ஓங்குமா? திமுகவின் கை ஓங்குமா என்பது பெரிய எதிர்பார்ப்புதான்.

 எச்.ராஜா

எச்.ராஜா

தி.நகர் தொகுதியில் எச்.ராஜா பெயர் உள்ளது.. மத்திய அமைச்சர் பதவிக்கு எச்.ராஜா முயற்சி செய்வதாக சொன்னார்கள்.. பாஜகவின் நிர்வாகிகளை நியமித்தபோதுகூட எச்.ராஜாவுக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.. இப்போது தி.நகரை எச்.ராஜா குறி வைக்க என்ன காரணம் என்று தெரியவில்லை.. ஒருவேளை மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் சமூக ஓட்டுக்களை குறி வைத்து களம் காண போகிறாரா? என்பதும் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றுதான்.. அதேசமயம், தி.நகர் திமுகவின் இன்னொரு கோட்டையாக விளங்கி கொண்டிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.. இதில் யார் ஜெயித்தாலும், இந்த தொகுதி பிரச்சாரம் மட்டும் பரபரப்பாக இருக்க போகிறது என்று இப்போதே தெரிந்துவிட்டது.

 கே.டி. ராகவன்

கே.டி. ராகவன்

செங்கல்பட்டு தொகுதியில் கே.டி.ராகவன் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது... டிவி விவாதங்களில் பாஜகவை தூக்கி உயரத்தில் வைத்து பேசிய ராகவன், ஏற்கனவே முக்கிய பொறுப்பை எதிர்பார்த்து வந்ததாக சொன்னார்கள்.. இப்போது தேர்தல் களத்திலேயே ராகவனை இறக்கிவிட்டுள்ளது மிகப்பெரிய திருப்பத்தை தந்துள்ளது.

 விபி துரைசாமி

விபி துரைசாமி

"உதயநிதியை ஆயிரம் விளக்கு தொகுதியில் நிறுத்த போகிறார்கள், அதனால்தான் எனக்கு கட்சியில் முக்கியத்துவம் தரவில்லை" என்று தாறுமாறாக திமுக மீது விமர்சனத்தை முன்வைத்து, அதே குற்றச்சாட்டுடன் பாஜகவில் இணைந்த விபி துரைசாமிக்கு எடுத்த எடுப்பிலேயே பெரிய பொறுப்பை தந்து அழகு பார்த்தது பாஜக தலைமை.. இதுபோதாமல், இப்போது ராசிபுரத்தில் களமிறக்கி விட்டுள்ளது.. ஏற்கனவே அதிமுகவின் டாக்டர் சரோஜா இங்கு ஸ்டிராங்காக இருக்கிறார்.

 சரோஜா

சரோஜா

கடந்த முறை சரோஜாவை எதிர்த்துதான் விபி துரைசாமி போட்டியிட்டார்.. சரோஜா, துரைசாமியை விட 9 ஆயிரத்து 631 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்... இவருடைய வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர் விபி துரைசாமி சென்னை ஹைகோர்ட்டில் கேஸ் போட்டது வரை நடந்தது.. இறுதியில் சரோஜாவுக்கு ஆதரவாக தீர்ப்பும் வந்தது.. ஆனால், இப்போது அதே அதிமுக கூட்டணியில்தான் விபி. துரைசாமி இடம் பெற்றுள்ளார்.. சரோஜா + வி.பி.துரைசாமி இருவரும் சேர்ந்து திமுகவுக்கு எதிராக களமிறங்கினால், அதன் ரிசல்ட் பெரும் எதிர்பார்ப்புக்குரியதுதான்!

 வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் களமிறங்க போகிறார்.. ஒட்டுமொத்த கொங்கு மண்டலத்தையே அதிமுக தன் கைப்பிடியில் வைத்துள்ளது.. அந்த தொகுதி அமைச்சர்கள், ஏகப்பட்ட நலத்திட்டங்களை வாரி வழங்கி கொண்டிருக்கிறார்கள்.. அப்படி இருக்கும்போது, கோவையை அதிமுக பாஜகவுக்கு விட்டுத்தருமா என்று தெரியவில்லை.. அதேசமயம் இந்த தொகுதிதான் தனக்கு வேண்டும் என்று பாஜக தரப்பில் அடம்பிடித்தவர்களில் வானதியும் ஒருவர்.. இப்போது தேசிய அளவில் பொறுப்பிலும் உள்ளதால், வானதிக்கு கோவை எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்று தெரியவில்லை.

அண்ணாமலை

அண்ணாமலை

எதிர்பார்த்தபடியே அரவக்குறிச்சியில் அண்ணாமலை ஐபிஎஸ் போட்டியிட போகிறார்.. செந்தில்பாலாஜி எங்கே போட்டியிட்டாலும் அங்கேதான் நானும் போட்டியிடுவேன் என்று அடம் பிடித்தவர் அண்ணாமலை.. திமுகவில் செந்தில்பாலாஜி மிக முக்கிய இடத்தில் உள்ள நிலையில், மற்றொரு பக்கம் பசை உள்ள பார்ட்டியாக செந்தில் பாலாஜி திகழும் நிலையில், அண்ணாமலையை பாஜக அவருக்கு எதிராக களம் இறக்குகிறது.. அதனால் தமிழக தொகுதியில் அரவக்குறிச்சி பிரச்சாரம் அனல் கிளப்பும் என்றே தெரிகிறது..

கனிமொழி

கனிமொழி

தூத்துக்குடி தொகுதியில் சசிகலா புஷ்பா இடம் பெற்றுள்ளார்.. ஏற்கனவே இந்த தொகுதியில் ஸ்டார் அந்தஸ்துடன் வலம் வருகிறார் எம்பி கனிமொழி.. கருணாநிதி இறந்த பிறகு எத்தனையோ துர்சம்பவங்களை இந்த தூத்துக்குடி சந்தித்துள்ளது.. அந்த வகையில், தொகுதி மக்களின் மனங்களை கனிமொழி பல வகையில் கவர்ந்து வருகிறார்.. நாடார் வாக்குகளை மட்டுமே குறி வைத்து சசிகலா புஷ்பா களமிறங்கினாலும் கனிமொழியின் கோட்டையாக மாறியுள்ள தூத்துக்குடியை பாஜக வெல்லுமா என்பது எதிர்பார்ப்புக்குரியதுதான்.

ஆக, பாஜக வெளியிட்டதாக சொல்லப்படும் இந்த உத்தேச வேட்பாளர் லிஸ்ட்டை பார்த்தால், திமுக VS பாஜகவுக்கும்தான் நேரடி போட்டி என்பது போலவே இருக்கிறது..!

English summary
TN BJP contesting in 38 constituencies and what is dmk going to do
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X