அன்புள்ள மருத்துவருக்கு.. 50 காசு போஸ்ட் கார்டில் வந்த கடிதம்.. நெகிழ்ந்து போன தமிழிசை
சென்னை: அன்புள்ள மருத்துவருக்கு.. என 50காசு போஸ்ட் கார்டில் புதுக்கோட்டை மாணவர்கள் அனுப்பிய கடிதத்தால் தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நெகிழ்ச்சி அடைந்தார்
பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் எம்பிபிஎஸ் படித்த மருத்துவர் ஆவார். கட்சிப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் மருத்துவ பணியில் இருந்து அவர் ஒதுங்கி உள்ளார்.

எனினும் அவ்வப்போது தான் போட்டியிட்ட தூத்துக்குடி தொகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் மக்களின் கோரிக்கையை ஏற்று இலவச மருத்துவ முகாம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தேசிய மருத்துவர் தினம் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழிசை சவுந்திரராஜனுக்கு புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், அனுமார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாணவ-மாணவிகள் மருத்துவ தின வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார்கள். 50 காசு போஸ்ட் கார்டில் வந்த வாழ்த்து செய்தியை பார்த்து தமிழிசை சவுந்திரராஜன் நெகிழ்ந்து போனார்.
புதுக்கோட்டை மாவட்டம் ,கறம்பக்குடி ஒன்றியம், அனுமார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாணவ-மாணவிகளின் மருத்துவ தின வாழ்த்து செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும்,பாராட்டுகளும்... pic.twitter.com/z7Y8eMVWdt
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) July 1, 2019
இதனை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தமிழிசை சவுந்திரராஜன், மாணவர்களின் கடிதம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும் என்றும் பதிவிட்டுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications