சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'நேரம் தவறாமை' - அடிக்கடி 'வாட்ச்'-ஐ பார்த்த முதல்வர் ஸ்டாலின் - 'பதறிய' அதிகாரிகள்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற போது, அவரது ஒரு செயல் உடனிருந்த அதிகாரிகளை பதட்டத்திலேயே வைத்திருந்தது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று திமுக வெற்றிப் பெற்ற நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான பதவியேற்பு விழாவில், ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க, அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

பிறகு கோபாலபுரம் வீட்டுக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய போது கண்கலங்கினார். கலைஞர் இப்போ இல்லையே என்பது போல், படத்தை நோக்கி கைக்காட்டி கண் கலங்க, உடனிருந்த உறவினர்கள் அவரை சமாதானப்படுத்தினர்.

இவரைவிட பெஸ்ட் யாருமில்லை.. தமிழகத்தின் புது நிதியமைச்சர் பிடிஆர். மலைக்க வைத்த பின்னணி.. யார் இவர்இவரைவிட பெஸ்ட் யாருமில்லை.. தமிழகத்தின் புது நிதியமைச்சர் பிடிஆர். மலைக்க வைத்த பின்னணி.. யார் இவர்

 விழா முடியும் வரை

விழா முடியும் வரை

இந்த நிலையில், பதவியேற்பு விழா நடைபெறும் ஆளுநர் மாளிகைக்கு வந்ததில் இருந்து முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி தனது வாட்ச் மூலம் நேரத்தை பார்த்துக் கொண்டே இருந்தார். 8:55 மணிக்கு விழா அரங்குக்கு வந்த ஸ்டாலின், ஆளுநருக்காக காத்திருக்கத் தொடங்கியதில் இருந்து, விழா முடியும் வரை அடிக்கடி வாட்சை பார்த்ததை அங்கிருந்தவர்கள் கவனிக்க நேரிட்டது.

 பல உத்தரவுகள்

பல உத்தரவுகள்

ஏனெனில், காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை, முதல் நாள் ஷெட்யூல் பக்காவாக போடப்பட்டிருந்தது. பதவியேற்ற பிறகு கோபாலபுரம், கலைஞர் நினைவிடம் என்று அடுத்தடுத்து ஷெட்யூல் போடப்பட்டிருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக மாலை 4 மணி முதல் 7 மணி வரை மிக முக்கியமான மீட்டிங்குகள் அரேஞ் செய்யப்பட்டுள்ளன. இதில், மாலை நான்கு மணிக்கு தனது முதல் அமைச்சரவை கூட்டத்தை கூட்டும் ஸ்டாலின் அதில பல உத்தரவுகளை அமைச்சர்களுக்கு வழங்க உள்ளார்.

 பதறிய அதிகாரிகள்

பதறிய அதிகாரிகள்

அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு, மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் தொடங்குகிறது. இதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. இப்படி முதல் நாளே பரபரப்பின் உச்சத்தில் இருக்கும் ஸ்டாலின், நிமிடத்திற்கு ஒருமுறை நேரம் தவறவிடக் கூடாது என்று வாட்சை பார்க்க, அதிகாரிகளோ பதறியடுத்து அடுத்தடுத்த பணிகளின் நிலைகளை கேட்டறிந்து கொண்டிருந்தனர்.

 புதிய முதல்வர்

புதிய முதல்வர்

விழா மேடையில், அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டிருக்க, அப்போதே அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை அனுப்பினார் ஸ்டாலின். இறுதியில் விழா முடிந்து, ஆளுநருடன் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வின் போதும், வாட்சை அடிக்கடி பார்த்தபடியே இருந்தார் புதிய முதல்வர். இதனால், அங்கும் அதிகாரிகள் 'என்ன சொல்ல வருகிறாரோ' என்று பதறியதை காண முடிந்தது.

English summary
TN cm mk stalin noticed time frequently - முதல்வர் ஸ்டாலின்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X