தமிழக சட்டம், ஒழுங்கு குறித்து.. டிஜிபி சைலேந்திரபாபுவுடன், முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சட்டம், ஒழுங்கு குறித்து டிஜிபி சைலேந்திரபாபுவுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யயப்பட்டு வேட்புமனு பரிசீலனையும் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு குறித்து டிஜிபி சைலேந்திரபாபுவுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் தலைமை செயலாளர் இறையன்யு, டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அசம்பாதவிதம் நடைபெறாமல் தடுக்க எந்தவித ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது?
பதற்றம் உள்ள பகுதிகளில் என்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்? என்பது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் போலீசாரிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து டிஜிபி, முதல்வரிடம் விளக்கினார். எந்தவித சட்ட, ஒழுங்கு பிரச்சினையும் இன்றி அமைதியாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் வலியுறுத்தினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications