2 நாள் ஓவர்.. நல்ல செய்தி என்ன? புதிர் போட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின்! இன்று உடைக்கப்படும் சீக்ரெட்?
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின் முக்கியமான அறிவிப்பு ஒன்றை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் விரைவில் அந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்து உள்ளது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.
பெரும் அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாட்டில் 60.70 % வாக்குகள் பதிவாகி உள்ளது.

ஸ்டாலின்
எப்போதும் போல சென்னையில் இந்த முறையும் மக்கள் அதிகமாக வாக்களிக்கவில்லை. சென்னையில் நேற்று காலையில் இருந்து பிற்பகல் வரை வாக்குப்பதிவு மையங்களில் கூட்டம் குறைவாகவும், மந்தமாகவும் காணப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சிகளில் அதிகபட்சமாக கரூரில் 75.84% வாக்குகள் பதிவாகி உள்ளன. அதேபோல் சென்னை மாநகராட்சியில் குறைந்தபட்சமாக 43.59% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

நல்ல செய்தி
இந்த நிலையில் கடந்த 16ம் தேதி சென்னை 45-வது புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்து நேற்று சென்னையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இன்னும் 2 நாட்களில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடுவேன் என்று கூறினார். ஒரு முக்கியமான நல்ல செய்தியை கூறுவேன். இப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இப்போது நான் நலத்திட்டங்கள், அறிவிப்புகள் எதையும் வெளியிட கூடாது. அது தேர்தல் விதி மீறலாக இருக்கும், என்று முதல்வர் புதிராக பேசி இருந்தார்.

அறிவிப்பு எப்போது?
இந்த நிலையில்தான் நேற்று தேர்தல் முடிந்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலினின் அந்த நல்ல செய்தி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை பற்றி ஏற்கனவே நம்மிடம் பேசிய தலைமை செயலக வட்டாரங்கள், தேர்தல் முடிந்ததும் முதல்வர் ஸ்டாலின் அந்த சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிடுவார். குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கும் அறிவிப்புதான் அது என்று பலர் நினைக்கிறார்கள்.
Recommended Video

வேறு முக்கிய அறிவிப்பு
ஆனால் முதல்வர் வெளியிட போகும் அறிவிப்பு அது இல்லை. முதல்வர் ஸ்டாலின் வேறு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட இருக்கிறார். குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கும் அறிவிப்பு விரைவில் வெளியாகும். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் முதல்வரின் இந்த அறிவிப்பு வித்தியாசமானது. இன்று அல்லது நாளை இதை பற்றி முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. இது மக்கள் நலத்திட்டம் சார்ந்த அறிவிப்பாக இருக்கும் என்று தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications