தீபாவளி இனிப்பு தயாரிப்போர்!.. உணவு பாதுகாப்பு துறையில் லைசன்ஸ் பெற உத்தரவு
சென்னை: தீபாவளி பலகாரம் தயாரிப்பவர்கள் லைசென்ஸ் இன்றி தயாரித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை வரும் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே பலகாரங்கள், இனிப்பு வகைகள்தான் பிரதானம். தீபாவளிக்கு இனிப்புகள் செய்து ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்வர்.

வீடு மட்டுமல்லாமல் நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கும். இதற்காக கடைகளில் பல்க் ஆர்டர் கொடுக்கப்படும். வீடுகளில் செய்ய முடியாதவர்களும் கடைகளில் பல்க் ஆர்டர் கொடுத்து வாங்கிக் கொள்வர்.
இப்படி ஆர்டர் கொடுத்து வாங்கும் இனிப்புகள் சுத்தமாக செய்யப்படுகிறதா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். அந்த வகையில் தற்போது தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு, காரம் தயாரிப்பவர்கள் உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உரிமம் இல்லாமல் இனிப்பு, பலகாரங்களை தயாரித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருள்களின் மேல் உணவு தயாரிப்பாளரின் முழு முகவரி இருக்க வேண்டும். அது போல் பேக்கிங் உணவு பொருளில் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி நிச்சயம் இருக்க வேண்டும். சைவம் மற்றும் அசைவ குறியீடும் அதில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த திருமண மண்டபங்கள், சமுதாய நலக் கூடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி இனிப்பு தயாரிக்கும் போது தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்திருக்க வேண்டும். முன்னதாக உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்யப்பட்டு அதற்கான உரிமத்தை பெற்றிருக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை குறிப்பிட்டிருக்கிறது.
அது போல் முறையாக உரிமம் பெற்று தீபாவளி பண்டிகைக்கு இனிப்புகளை தயார் செய்ய வேண்டும். இல்லையென்றால் தரமற்ற உணவு பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு அது அழிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
அந்த நிலையில் தீபாவளி பண்டிகை வரும் 12 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் இனிப்பு ,கார வகைகள் , கேக் போன்ற பேக்கரி உணவுகளை தயாரிக்கும் போது விற்பனையாளர்கள் முறையாக உரிமம் இல்லாமல் தயாரித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்வீட்ஸ் விநியோகிக்கும் தீபாவளி சீட் நடத்துபவர்களும் முறையாக உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications