சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சூப்பர் சான்ஸ்.. வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க மேலும் 3 மாதம் அவகாசம்.. தமிழக அரசு அரசாணை..!

வேலைவாய்ப்பு அலுவக பதிவை புதுப்பிக்க 3 மாதம் அவகாசம் தரப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: 2014-ம் ஆண்டில் இருந்து வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு அதை புதுப்பிக்க 3 மாத கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் கடந்த செப்டம்பர் 4-ந் தேதியன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, தங்கள் பதிவை 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்க தவறிய 48 லட்சம் பதிவுதாரர்கள் பயனடையும் வகையில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும்.

திண்டுக்கல்லில் வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் நவ.28-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- பயனடையலாமே! திண்டுக்கல்லில் வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் நவ.28-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- பயனடையலாமே!

 வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

2017, 2018, 2019 ஆகிய ஆண்டு களில் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு ஏற்கனவே 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. இக்கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ஏற்று புதுப்பித்தல் சலுகை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து வழங்கப்படும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.. இதுகுறித்து அரசுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் கடிதம் எழுதியுள்ளார். அவர் அளித்த கருத்துருவை அரசு கவனமுடன் ஆய்வு செய்தது.

 வழிகாட்டு மையம்

வழிகாட்டு மையம்

தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களில் 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை மற்றும், 2017, 2018, 2019 ஆகிய ஆண்டு களில் வேலைவாய்ப்பிற்கான பதிவை புதுப்பிக்க கடந்த மே மாத அரசாணையில் வழங்கப்பட்ட கால அவகாசம் முடிந்துள்ள நிலையில், மேலும் 3 மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படுகிறது.

அரசாணை

அரசாணை

இந்தச் சலுகையை பெற விரும்பும் வேலை நாடுநர்கள், அரசாணை வெளியிடப்படும் நாளில் இருந்து (2-ந் தேதியில் இருந்து) 3 மாதங்களுக்குள் விடுபட்ட பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த சலுகை ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். 3 மாதங்களுக்கு பின்பு பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். 1.1.2014 தேதிக்கு முன்பு புதுப்பிக்கத் தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.

நாளிதழ்கள்

நாளிதழ்கள்

இவ்வாணை பற்றிய விவரங்களை 2 முன்னிலை தமிழ் நாளிதழ்களில் வெளியிடுவதுடன், அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையங்களில் உள்ள தகவல் பலகையில் (Notice Board in all District Employment and Career Guidance Centres) பொது மக்களின் தகவலுக்காக காட்சிப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்குமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் அறிவுறுத்தப்படுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கால இடைவெளி

கால இடைவெளி

இந்த அரசாணை, அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களின் தகவல் பலகையில் மக்களுக்காக காட்சிப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது... தமிழக அரசின் இந்த தகவலானது பலர் வேலைவாய்ப்பை பெற ஏதுவாகவும், 3 மாத இடைவெளி பயன்பெறும் வகையிலும் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.

English summary
TN Gov has issued an additional 3 months to renew the registration for employment
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X