திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் வாட் வரி குறைப்பு...அதான் வரலாறு.. பழனிவேல் தியாகராஜன் சுளீர்

மத்திய அரசு அறிவுறுத்தலுக்கு முன்பே, பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்தது தமிழக அரசு என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் பெட்ரோல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டதுதான் வரலாறு என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசல் மீதான வரி 200 சதவீதத்துக்கும் மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் பெட்ரோல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டது என்றார்.

Recommended Video

    PTR சுளீர்! சட்டசபையை அதிர வைத்த PTR Thiyagarajan பேச்சு | Oneindia Tamil

    தமிழக சட்டசபையில் பிரதமர் மோடிக்கு பதிலளித்து பேசிய பழனிவேல் தியாகராஜன், கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் உற்பத்தி வரியை ஒன்றிய அரசு குறைக்கும் முன்பே தமிழ்நாடு அரசு வாட் வரியை குறைந்ததாக தெரிவித்துள்ளார்.

    1,160 கோடி இழப்பு

    1,160 கோடி இழப்பு

    கடந்த ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை ரூ.5ம், டீசல் வரியை ரூ. 10ஆம் குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதை சுட்டிக் காட்டினார். ஆனால் அதற்கு முன்பே செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசு பெட்ரோல் மீதான வாட் வரியில் ரூ.3 குறைத்ததாக குறிப்பிட்டார். இதனால் தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு ரூ. 1,160 கோடி இழப்பு ஏற்படுகிறது என்றார்.

    வரி வருமானம்

    வரி வருமானம்

    கடந்த 2014ம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு தொடர்ந்து அதிகரித்து வந்தது.
    2020-2021ம் ஆண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி வருமானம் மத்திய அரசுக்கு ரூ.3,89,622 கோடியாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் உற்பத்தி வரியில் தமிழ்நாட்டின் பங்கு வெறும் ரூ. 838 கோடி மட்டுமே கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    மத்திய அரசு வரி உயர்வு

    மத்திய அரசு வரி உயர்வு

    2014ம் ஆண்டு இருந்ததை விட தற்போது பெட்ரோல் மீதான கூடுதல் வரி 200%மும் டீசல் மீதான கூடுதல் வரி 500%மும் மத்திய அரசு உயர்த்தி இருப்பதாக பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். உற்பத்தி வரியில் இருந்து தான் மாநிலங்களுக்கு பங்கு கிடைப்பதாக தெரிவித்த அவர், கூடுதல் வரியில் இருந்து பங்கு கொடுப்பது இல்லை என்று கூறியுள்ளார்.

    பெட்ரோல், டீசல் விலை

    பெட்ரோல், டீசல் விலை

    2014 ஆகஸ்ட் மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 75 ஆக இருந்தது. 2021 ஏப்ரல் மாதம் ரூ.111 ஆக விலை உயர்ந்தது. அதே போன்று 2014 ஆகஸ்ட் மாதம் 1 லிட்டர் டீசல் விலை ரூ. 47ஆக இருந்ததை குறிப்பிட்டு இருக்கும் அவர், 2021 ஏப்ரல் மாதம் ரூ.101 உயர்ந்து உள்ளது. எனவே வரியை ஏற்றிய மத்திய அரசு தான் வரியை குறைக்க வேண்டும் என்றும் வாட் வரியை தமிழக அரசு உயர்த்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+