24 மொழிகள் மூலம், இனி தமிழ்மொழி கற்கலாம்! - முதலமைச்சர் ஸ்டாலின் முன்னெடுத்த சர்வதேச முயற்சி
சென்னை: 'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' எனப் பாடினார் பாரதியார். அந்தத் தமிழோசையை உலகம் முழுக்க பரப்புவதற்காக 'தமிழ்ப் பரப்புரைக் கழகம்' என்ற ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார்.

24 நாடுகள், 120 மையங்களில் தமிழ்
'தமிழைப் பரப்புவதற்குக் கழகமா?' எனப் பலர் யோசிக்கலாம். இந்தியைப் பரப்ப 'இந்தி பிரசார சபா' இல்லையா? அதைப் போல, தமிழைப் பரப்புவதற்கு ஒரு கழகம். இதன் துவக்க விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'தமிழ், வெறும் மொழி அல்ல; அது நம் உயிர்' என்றார்.
ஆகவேதான் பாரதிதாசனும், 'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்றார். உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழை, அயல்நாட்டினர் படித்தால்தானே தமிழ் பரவும். அந்தப் பரப்புரையைத்தான் இந்தக் கழகம் மேற்கொள்ள உள்ளது.
இதன்படி, உலகம் முழுவதும் உள்ள 24 நாடுகள், 120 மையங்களில் சேர்ந்து யாரும் தமிழ்ப் படிக்கலாம். அதற்கான களமே இந்தப் பரப்புரைக் கழகம்.
அரசின் சார்பில், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ் இணையக் கல்விக் கழகம், செம்மொழித்தமிழ் உயராய்வு மையம் என சில நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 'அதில் இல்லாத தனித்தன்மை, முதலமைச்சர் உருவாக்கியுள்ள இந்தக் கழகத்தில் என்ன இருக்கிறது?' என்பதை அறிந்துகொள்வது அவசியம்.

பரப்புரைக் கழகத்துக்கான தேவை என்ன?
தமிழ்ப் பரப்புரைக் கழகத்துக்கான பாடநூல் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட எழுத்தாளர் 'ஆழி' செந்தில்நாதனிடம் பேசினோம். அவர் இதன் அவசியம், தனித்துவம் குறித்து பலவித தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். ''அரசின் இந்த முயற்சி நல்லதொரு ஆரம்பம்'' என்கிறார் அவர்.
''தமிழ் மொழிக்காக இயங்கி வரும் அரசு நிறுவனம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான வேலைத்திட்டங்கள் உள்ளன. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் என்பது தமிழ் தொடர்பான ஆய்வுகளைச் செய்து வருகிறது. அதனை நூலாக வெளியிடுகிறது. இதுவே அதன் பிரதான பணி.
அரசாங்கத் துறைகளில் ஆட்சித் தமிழை அமல்படுத்தும் பணியைத் தமிழ் வளர்ச்சி இயக்ககம் செய்து வருகிறது. சென்னைப் பல்கலைக்கழகத்திலும் தமிழ் வளர்ச்சிக் கழகம் என்ற ஒன்று உள்ளது. இது தமிழ்ப் பணியைச் செய்வதற்காகவே உருவாக்கப்பட்டது.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் என்பது தமிழ்க் கல்லூரிக்கான பொதுவான தளம். தமிழ் இணையக் கல்விக் கழகம் என்ற ஒன்றும் உள்ளது. தகவல் தொழில்நுட்பக் களத்தில் தமிழைச் செயல்படுத்துவது இதன் முக்கியமான பணியாக இருக்கிறது.
இவ்வளவு துறைகள் இருந்தாலும் நீண்ட நாள்களாகவே வெளிநாட்டுவாழ் தமிழர்களுக்குத் தமிழைப் போதிப்பதற்கென்று ஓர் அமைப்பு தேவையாக இருந்தது. தவிர, பிழைப்புக்காக வெளிநாடு சென்று தமிழை மறந்த தலைமுறையினரும் உள்ளனர்.
அதேபோல, வெளிநாட்டிலேயே பிறந்து தமிழ்த் தெரியாத தலைமுறையினரும் உள்ளனர். இவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுப்பதற்கென்று பொதுவான பாடநூல்கள் இல்லை. மேலும், தமிழர் அல்லாதவர்கள் யாரேனும் தமிழைக் கற்க விரும்பினால் அதற்கும் நம்மிடம் பாடப் புத்தகங்கள் இல்லை.

பத்தோடு பதினொன்று அல்ல!
இதற்கான நூல்களை அரசு நிறுவனங்களும் முன்னரே வெளியிட்டுள்ளன. ஆனால், அந்த நிறுவனங்களுக்கு இதுவே பிரதான வேலையாக இல்லை. தமிழ் இணையவழிக் கழகமானது, ஆன்லைன் மூலம் தமிழைக் கற்றுத் தருகிறது. அதிலிருந்து மேம்பட்ட தரத்துக்கு எப்படிப் போகலாம் என தமிழ்நாடு அரசு யோசித்ததன் பலன்தான் இந்தத் தமிழ்ப் பரப்புரைக் கழகம்.
பிரெஞ்சு மொழியைக் கற்பதற்கு Alliance francaise, ஸ்பானிஷ் மொழியைக் கற்பதற்கு Spanish Instituto Cervantes, சீன மொழியைக் கற்பதற்கு Confucius Institute என உலக மொழிகள் பலவற்றைக் கற்றுக் கொடுப்பதற்கு நிறுவனங்கள் உள்ளன.
அதேபோல் தமிழுக்கும் தனியாக ஒரு நிறுவனம் தேவைப்பட்டது. அந்தப் பணியைச் செய்வதற்காகத்தான் 'தமிழ்ப் பரப்புரைக் கழகம்' ஏற்படுத்தப்பட்டது. இது முறைப்படுத்தப்பட்ட தரமான பாடத்திட்டத்துடன் பிற மொழிக்காரர்களுக்குத் தமிழைக் கற்பிக்கும்.
இங்கு இந்தி மொழிக்கு மட்டும் பத்துவிதமான நிறுவனங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தேவை இருக்கிறது. அதேபோல தமிழுக்குப் பல நிறுவனங்கள் இருந்தாலும் வெளிநாட்டவருக்கு தமிழைக் கற்றுத் தருவது மட்டுமே இதன் பிரதான நோக்கமாக இருக்கும்.

அமெரிக்கப் பள்ளிகளில் தமிழ்
ஜெர்மன், இந்தி, சம்ஸ்கிருதம் கற்கும்போது எப்படி தேர்வு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவோ அதேபோல் தமிழைக் கற்பவர்களுக்கும் ஒவ்வொரு மட்டத்திலும் முறையாக தேர்வுகள் நடத்தப்படும். இதில் கடைப்பிடிக்கப்பட உள்ள நடைமுறைகள், உலகம் முழுவதும் பொதுவானதாக இருக்கும்.
அமெரிக்க யூனியனில் உள்ள பல நாடுகள் தமிழ் மொழியை அவர்களின் கல்வித் திட்டத்துடன் சேர்த்துக் கற்பித்து வருகின்றன. இரண்டாவது மொழியாக தமிழை எடுத்துப் படிக்கும்போது அதற்கான மதிப்பெண்ணை மேற்படிப்பின்போது அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர்.
அமெரிக்காவில் வார விடுமுறை நாள்களில் நூற்றுக்கணக்கான தமிழ்ப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவர்களின் பாடத்திட்டத்துக்கென பொதுவான பாடநூல்கள் இல்லை. இதைச் சுட்டிக் காட்டி வெகுகாலமாகவே அவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் பரப்புரைக் கழகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
இதுவரையில் வெளிநாட்டுவாழ் பயனாளர்களுக்குத் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் நூல்கள் அனுப்பப்பட்டு வந்தன. ஆனால், அந்தப் பாடநூல்கள் அங்குள்ள சூழலுக்குப் பொருந்தவில்லை. அவர்களுக்குப் பிரத்தியேக புத்தகங்கள் தேவைப்பட்டன. இதனையடுத்து, வெளிநாட்டுவாழ் தமிழர்களை மனதில் வைத்து 24 மொழிகளில் புதிய தமிழ் நூல்களைத் தயாரித்துள்ளோம்.

ஸ்டாலின் காட்டிய ஈடுபாடு
இந்திய மொழிகளான மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா, இந்தி, பெங்காலி, குஜராத்தி, பஞ்சாபி, அசாமி, உருது, மராத்தி போன்ற மொழிகளிலும் அயல்நாட்டு மொழிகளான ஆங்கிலம், ஜெர்மன், ஸ்பானிஷ், பிரெஞ்சு, இத்தாலி, ரஷ்யன், தாய், மலாய், சைனீஷ், ஜப்பானீஷ், அரபி போன்ற மொழிகளிலும் நூல்களை உருவாக்கி இருக்கிறோம். இது ஒரு தொடக்கம்தான். போகப் போக மேலும் அதிகரிக்கும்" என்கிறார் ஆழி செந்தில்நாதன்.
மேலும் அவர், ''மொழி சார்ந்து, தொல்லியல் சார்ந்து, பதிப்புத்துறை சார்ந்து சர்வதேச அளவில் அடிப்படையான சில இன்ஸ்டியூட்டுகளை உருவாக்க வேண்டுமென திமுக அரசு விரும்புகிறது. இந்த விஷயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அதிக ஈடுபாட்டைக் காட்டுகிறார். அவருக்கு அந்தத் தாகம் இருக்கிறது.
அப்படியான முயற்சியை மேற்கொள்ளும்போது என்னைப் போன்ற தமிழ்த் தேசிய அரசியல் ஆர்வலர்கள் அதில் பங்கேற்க வேண்டும். வெறுமனே குறைகளை முன்வைப்பது தமிழ்த் தேசிய அரசியல் இல்லை. ஆகவே முதலமைச்சர் ஸ்டாலினின் முயற்சிக்குப் பின்னால் நாங்கள் முழுமையாக உடன் நிற்கிறோம்" என்கிறார்.
''தமிழ்ப் பரப்புரைக் கழகத்தின் வழியே ஒரு சர்வதேச பாட நிறுவனத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தித் தந்துள்ளார் என்பது மகிழ்ச்சியான செய்தி'' என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.
-
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications