சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி இருந்தாலே கொரோனா பரிசோதனை கட்டாயம்!

Google Oneindia Tamil News

சென்னை: காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி இருந்தாலே கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Recommended Video

    Omicron 5 New Symptoms | AIIMS Delhi | Oneindia Tamil
    TN Govt announces revised guidelines on Covid19 Test

    தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கி உள்ளன. அதேபோல் ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பும் அதிகரித்துள்ளது.

    இதனால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்வதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்:

    • சளி, காய்ச்சல், இருமல், உடல் வலி இருப்போர் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
    • கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், இணை நோய் உள்ளவர்கள் அறிகுறிகள் இல்லாத போதும் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்.
    • கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவரின் தொடர்பில் இருந்த 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
    • மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    11 மருத்துவ கல்லூரிகளுடன் செம்மொழி நிறுவன புதிய வளாகத்தையும் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி11 மருத்துவ கல்லூரிகளுடன் செம்மொழி நிறுவன புதிய வளாகத்தையும் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

    இவ்வாறு தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Tamilnadu Govt has announceed revised guidelines on Covid19 Test.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X