வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை.. 15 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்த தமிழக அரசு
சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக 15 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக 15 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள 15 மண்டலங்களுக்கு தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை ஜூன் மாதம் தொடங்கியது. செப்டம்பர் இறுதிவரை தென்மேற்குப் பருவமழை காலமாகும். அக்டோபர் முதல் வடகிழக்குப் பருவமழை ஆரம்பிக்கும். டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை நீடிக்கும்.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் அதிக வெள்ளம் ஏற்படும். குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிப்புக்கு ஆளாவார்கள். இந்த ஆண்டு ஜூன் மாதத்திலேயே திடீரென மழை கொட்டித்தீர்த்தது. பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. எனவே தமிழக முன்கூட்டியே சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக 15 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை பணிகளை மேற்கொள்ள ஆண்டுதோறும் மண்டல வாரியான அலுவலர்களை நியமனம் செய்யப்படுவார்கள்.
இதன்படி இந்தாண்டு சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரி என 15 ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை அலுவலர்களாக தமிழக அரசு நியமித்துள்ளது.
15 மண்டலங்களும் ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. திருவெற்றியூர் மண்டலம்: சரவண குமார் ஜவாத் மணலி மண்டலம்: கணேசன் மாதவரம் மண்டலம்: சந்தீப் நந்தூரி தண்டையார்பேட்டை மண்டலம்: வினய் ராயபுரம் மண்டலம்: விஜய கார்த்திகேயன் திரு.வி.க.நகர் மண்டலம்: ரன்ஜீத் சிங் அம்பத்தூர் மண்டலம்: சுரேஷ் குமார் அண்ணா நகர் மண்டலம்: பழனிசாமி தேனாம் பேட்டை மண்டலம்: ராஜாமணி கோடம்பாக்கம் மண்டலம்: விஜயலட்சுமி வளசரவாக்கம் மண்டலம்: மணிகண்டன் ஆலந்தூர்: நந்தகோபால் அடையாறு மண்டலம்: நிஷாந்த் கிருஷ்ணா பெருங்குடி மண்டலம்: ரவி சந்திரன் சோழிங்கநல்லூர் மண்டலம்: வீரராகவ ராவ் ஆகிய 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications