• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

தமிழக மக்களுக்கு நற்செய்தி.. ரேஷனில் கிடைக்கப்போகும் 13 வகை பொருட்கள்.. அரசு சூப்பர் உத்தரவு

|

சென்னை: தமிழக அரசு ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக சமையலுக்குப் பயன்படும் 13 வகையான மளிகைச் சாமான்கள் அடங்கிய தொகுப்பை வழங்க முடிவு செய்துள்ளது. fகலைஞர் பிறந்த நாளான ஜூன் 3 ம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே ரேஷன் கார்டுகளுக்கு ரூ.2000 முதல் தவணையாக வரும் 15ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் கடந்த மே 7ம் தேதி திமுக ஆட்சி அமைந்தது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவர் முதல்வராக பொறுப்பேற்ற அன்றே. அரிசி ரேஷன் கார்டுகளுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.4,000 வழங்கப்படும் என்ற உத்தரவில் முதல் கையெழுத்திட்டார். அதன்படி முதல் தவணையாக ரூ.2,000 இம்மாதம் 15ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்தியா மிக மோசமான நிலைக்கு செல்ல.. மத & அரசியல் நிகழ்வுகள் தான் காரணம்.. உலக சுகாதர மையம் தகவல்இந்தியா மிக மோசமான நிலைக்கு செல்ல.. மத & அரசியல் நிகழ்வுகள் தான் காரணம்.. உலக சுகாதர மையம் தகவல்

இந்த சூழலில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கு காரணமாக அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கால் அதிக பாதிப்பு

ஊரடங்கால் அதிக பாதிப்பு

குறிப்பாக கட்டுமான தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், வீட்டு வேலை செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், விவசாய கூலி வேலைக்கு செல்வோர், சிறு, குறு நிறுவனங்களில் வேலை செய்வோர், நிறுவனங்கள் மற்றும் கடைகளில் வேலை செய்வோர், சிறிய கடைகள் வைத்திருப்போர், என ஏழை மக்கள் பலரும் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். அரசு சில தளர்வுகளை அளித்திருந்தாலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பலர் வேலைக்கு சென்று வர முடியாமல் தவிக்கிறார்கள்.

அதிகாரி தகவல்

அதிகாரி தகவல்

எனவே ஏழை மக்கள் நலனுக்காக ரேஷனில் நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பாக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி ஒருவர் பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில், கொரோனாவை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் ரேஷன் பொருட்கள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உணவுத்துறை பரிசீலனை

உணவுத்துறை பரிசீலனை

கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் முதல் அலை கொஞ்சம் குறைந்து முடங்கிய தொழில்கள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பின. ஆனால் நடப்பாண்டின் இரண்டாவது அலை மீண்டும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அன்றாடம் வேலைக்கு சென்று வந்த தொழிலாளர்கள் பலரின் நிலை மிகவும் கவலை அளிக்கும் வகையில உள்ளது. அவர்களின் குடும்ப செலவை குறைக்க அரிசி ரேஷன் கார்டுகளுக்கு சமையலுக்கு தினசரி பயன்படுத்தும் 10 முதல் 15 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்குவது தொடர்பாக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை பரிசீலித்து வருகிறது.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

இதில் என்னென்ன பொருட்களை வழங்கலாம், எத்தனை மாதத்திற்கு வழங்கலாம் என்பது பற்றி அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கான நிதி ஆதாரம் குறித்து இறுதி செய்யப்பட்ட பின்னர் தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றார்.

பயனுள்ள அறிவிப்பு

பயனுள்ள அறிவிப்பு

அநேகமாக அரிசி ரேஷன் அட்டை தாரர்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வழங்கப்பட்டால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அரசு இதற்கான அறிவிப்பினை வெளியிடும் என்று நம்புவோம்.

ஜூன் 3ல் கிடைக்கும்

ஜூன் 3ல் கிடைக்கும்

இந்நிலையில் கொரோனா நிவாரணமாக மளிகை பொருட்கள் வழங்கப்போவது உறுதியாகி உள்ளது. ரேஷன் கடைகளில் 13 வகை மளிகை பொருட்கள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. கோதுமை, உப்பு, ரவை, கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் தூள், குளியல் சோப், சலவை சோப் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஜூன் 3ம் தேதி கலைஞர் பிறந்த நாளில் மளிகை பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். தமிழகத்தில் 2.11 கோடி குடும்பங்கள் இந்த திட்டத்தால் பயன்பெறுவார்கள். அரசின் இந்த திட்டம் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

English summary
The Government of Tamil Nadu is considering providing a set of groceries for ration cards for the benefit of the poor. Announcement coming soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X