Sunday Lockdown: பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. ஹோட்டல்களுக்கு திடீர் சலுகை அறிவித்த தமிழக அரசு!
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தினசரி பாதிப்பு 10,000-ஐ கடந்து விட்டது. ஆக்டிவ் கேஸ்களும் தொடர்ந்து உச்சத்தில் உள்ளன. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த தினமும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கும் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கில் அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு
இனி ஞாயிற்றுக்கிழமைதோறும் காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி, நகைக் கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் திறக்கப்படாது. மாநிலத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி இல்லை. இதேபோல் மெட்ரோ ரயில்களும் இயங்காது. ரயில், விமான பயணிகள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் செல்லும்போது பயணச் சீட்டை காண்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்
அதே வேளையில் சென்னை புறநகர் மின்சார ரயில்கள் இன்று இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ATM மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் (petrol, diesel & LPG) இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும். பெட்ரோல் பங்க்குகளும் செயல்படலாம்.

திருமண விழாவுக்கு செல்லலாம்
இதேபோல் தமிழகத்தில் இன்று திருமண விழாவுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருமண விழாவுக்கு செல்பவர்கள் திருமண அழைப்பிதழை போலீசாரிடம் காண்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் உணவகங்கள் வாடிக்கையாளர் வீடுகளில் உணவு விநியோகிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

உணவகங்களுக்கு சலுகை
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் போது, உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி விடுதிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு தனியார் மின்னணு வர்த்தக விநியோக முறையில் மட்டுமின்றி, தங்களுடைய சொந்த விநியோக முறையில் (Own Delivery) மூலமாகவும் உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய அனுமதியளிக்கப்படும். இவ்வாறு வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு உணவகம் மூலமாக நேரடியாக உணவு வழங்கப்படுவதற்கு காவல் துறை ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications