3ஆம் அலையை எதிர்கொள்ள தயார்.. உயிரிழப்பு அதிகரிக்க இதுதான் காரணம்.. அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா 3ஆம் அலையை எதிர்கொள்ளத் தேவையான மருத்துவ உள்கட்டமைப்புகளை உருவாக்க நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்துள்ளதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை கொண்ட சிறப்பு கொரோனா சிகிச்சை மையத்தில் கூடுதலாக ஆக்சிஜன் வசதி கொண்ட 500 படுக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 2-வது கொரோனா சிகிச்சை மையத்தை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

சிறப்பு கொரோனா மையம்
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இனி சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளை நேரடியாக உருக்காலை வளாகத்திற்கு அனுப்பலாம். சேலம் அரசு பொது மருத்துவமனைக்குச் சென்று அங்கிருந்து வரத் தேவையில்லை. சேலம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வரைத் தொடர்பு கொண்ட பின்னர், உருக்காலை வளாகத்திற்கு வரலாம். தனியார் மருத்துவமனைகள் பரிந்துரை செய்தாலும் நேரடியாக வரலாம்.

கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 9,404 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களில் 957 பேருக்கு மட்டுமே கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாசிட்டிவ் விகிதம் 10 சதவீதமாகக் குறைந்துள்ளது. இன்னும் ஒரு வாரம் அல்லது 10 தினங்களுக்குள் கொரோனா தொற்று பரவல் பூஜ்ஜியம் என்ற நிலையை அடையத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

உயிரிழப்பு அதிகரிக்கக் காரணம்
கொரோனா அறிகுறிகள் தெரிந்த பின்னர் உடனடியாக மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வராமல் வீட்டிலேயே இருந்து விடுகின்றனர். மூச்சுத்திணறல் ஏற்பட்டு, கடைசி நேரத்தில் சிகிச்சைக்கு வருவதால் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியவில்லை. இந்த சிக்கலை எதிர்கொள்ளக் காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தவுள்ளோம்.
Recommended Video

கொரோனா 3ஆம் அலை
தமிழ்நாடு அரசைப் பொருத்தவரை ஒரு மாதத்தில் 2ஆம் அலையை எதிர்கொள்ளும் அளவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பான மருத்துவ கட்டமைப்பை உருவாக்கியுள்ளார். முதல்வர் எடுத்த உடனடி நடவடிக்கைகள் காரணமாக உயிரிழப்புகள் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் 3ஆம் அலை வரக்கூடாது. அப்படி வந்தாலும், அதை எதிர்கொள்ளத் தேவையான மருத்துவ கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் நடைபெறுகிறது. கொரோனா 3ஆம் அலை வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.

ஸ்டாலின் சேலம் விசிட்
மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். தமிழ்நாட்டில் 100 சதவீதம் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அரசின் இலக்கு. அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களாகக் கையிருப்பில் இல்லாததால் தடுப்பூசி போடப்படவில்லை. நாளை மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் வருகிறார். ஜூன் 12-ந் தேதி காலை 10.30 மணிக்கு மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீரைத் திறந்து வைக்கிறார்.

மின்சார கட்டம்
மின்வாரியத்தைப் பொருத்தவரை ஊரடங்கு காரணமாகப் பொதுமக்களுக்கு 3 வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்று - கடந்த 2019ஆம் ஆண்டு மே மாத கட்டணத்தைச் செலுத்தலாம். இரண்டு - கடந்த மாத பில் தொகையைச் செலுத்தலாம். மூன்று - மின்சார மீட்டரை புகைப்படம் எடுத்து அனுப்பி அதனடிப்படையில் கட்டணம் செலுத்தலாம். இதனால் கட்டணம் அதிகம் என்ற நிலை யாருக்கும் வராது" என்று அவர் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications