Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி ரூ.1000 இவர்களுக்கும் கிடைக்கும்.. புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் நிபந்தனை தளர்வு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் ஆகிய திட்டங்களில் விண்ணப்பிக்க திருநங்கை, திருநம்பிகளுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினத்தவர்களும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழில் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

TN Govt Lifts Restrictions on Transgender Applicants for Pudhumaipen and Tamil Pudhalvan Schemes

நிபந்தனைகள் தளர்வு

தகுதி வரம்புகளில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினத்தவர்களுக்கு இந்த நிபந்தனை முழுவதுமாக தளர்த்தப்பட்டுள்ளது.

பட்டயம், தொழிற்படிப்பு படிக்கும் திருநங்கை, திருநம்பிகள், இடைபாலினர்கள் விண்ணப்பிக்கலாம். திருநங்கைகள் நல வாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை சான்றாக சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். உயர்கல்வி நிறுவனத்தின் மூலம் UMIS இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.

புதுமைப்பெண் திட்டம்

கல்லூரி கல்வி, உயர்கல்வி, ஆராய்ச்சி கல்விக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அரசுப் பள்ளி மாணவிகள் அதிகளவில் உயர்கல்வி படிக்க 'புதுமைப்பெண்' திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு நிதி நெருக்கடி காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவிகளை அனுப்ப முடியாத சூழல் இருக்கிறது. இதுபோன்ற சூழலில் புதுமைப்பெண் திட்டம் மாணவிகளுக்கு உதவியாக இருக்கிறது. 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டது.

புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு படித்தவராக உள்ள பெண்கள் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவினை முடிக்கும் வரை மாதம் தோறும் 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது.

புதுமைப்பெண் திட்டத்தில் திருநங்கைகளும் பயன்பெற்று வருகின்றனர். புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெறும் திருநங்கைகள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழில் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்ப்புதல்வன் திட்டம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளிலும்,அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கும் உன்னத நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் திருநம்பிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழில் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

டிப்ளமோ, தொழிற்படிப்பு படிக்கும் திருநங்கை, திருநம்பிகள், இடைபாலினர்கள் விண்ணப்பிக்கலாம். திருநங்கைகள் நல வாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை சான்றாக சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். உயர்கல்வி நிறுவனத்தின் மூலம் UMIS இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+