பழைய "டீம்" வேண்டாம்.. தமிழ்நாடு முழுக்க கொத்தாக "இன்ஸ்பெக்டர்கள்" மாற்றம்.. ஸ்டாலினின் அஸ்திரம்!?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுக்க மொத்தமாக இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்யும் வேலையில் அரசு இறங்கி உள்ளது. சென்னையில் ஏற்கனவே இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன.

தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி மற்றும் தமிழ்நாடு முழுமைக்குமான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் வேகம் காட்டி வருகிறது.

தேர்தல் ஆணையம் ஒரு பக்கம் இந்த பணிகளில் வேகம் காட்டி வரும் நிலையில், திமுகவும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. முதல் ஆளாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி தமிழ்நாடு முழுக்க தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

தீவிரம்

தீவிரம்

ஆளும் கட்சி என்பதால் இந்த தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது. இதனால் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பெயரில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் எல்லோரும் மாநிலம் முழுக்க தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். பெரும்பான்மை இடங்களில் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும் என்று திமுக தீவிரமாக பணியாற்றி வருகிறது.

ஆட்சி

ஆட்சி

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தமிழ்நாடு தலைமை செயலாளர் தொடங்கி மாவட்ட ஆட்சியர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட பலரும் மாற்றப்பட்டனர். ஆனால் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் பெரிய அளவில் நடக்கவில்லை. கொரோனா காலம் என்பதால் பெரிய அளவில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்படவில்லை. நிர்வாக காரணங்களுக்காக இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்படாமல் தொடர்ந்தனர்.

மாற்றம்

மாற்றம்

இந்த நிலையில், தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காவல்துறை இன்ஸ்பெக்டர்களை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது தமிழ்நாடு அரசு. சென்னையில் இருந்து இதற்கான பணிகள் தொடங்கி விட்டன. தேர்தலில் குளறுபடி நடக்க கூடாது என்பதால் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பெயரில் இந்த மாற்றம் தொடங்கி உள்ளது.

 உத்தரவு

உத்தரவு

சென்னை பெருநகர மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 179 காவல் நிலைய சட்டம் ஒழுங்கு மற்றும் க்ரைம் பிரிவு இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் இவர்களை மாற்றி உத்தரவை பிறப்பித்துள்ளார். சென்னையில் இருந்த இந்த இன்ஸ்பெக்டர்கள் முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவர்கள். இந்த டீம்கள் எல்லாம் முன்னாள் அதிமுக அமைச்சர் மூலம் உருவாக்கப்பட்டது.

அதிமுக

அதிமுக

இதே டீம்கள் தொடர்ந்தால் தேர்தல் நேரத்தில் சிக்கலாகும். தேர்தலில் திமுகவிற்கே கூட அது எதிராக மாறலாம். அதிகாரிகளை மாற்றுவது மட்டுமே அரசு நிர்வாகத்தை மேற்கொள்ளவும் வசதியாக இருக்கும். இதனால் பழைய டீமை உடைத்து, இன்ஸ்பெக்டர்களை மாநிலம் முழுக்க மாற்றி மாற்றி போடும் முடிவை அரசு எடுத்துள்ளது. முதல் கட்டமாக மாநகராட்சிகளில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்ற முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

கொத்து

கொத்து

வரும் நாட்களில் கொத்தாக மாநிலம் முழுக்க அதிகாரிகள் மாற்றப்பட உள்ளனர். கோவை, மதுரை, திருச்சி என்று ஒவ்வொரு மாவட்டமாக அதிகாரிகள் மாற்றப்பட உள்ளனர். தேர்தலுக்கு திமுக வேகமாக தயாராகி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அதிகபட்ச இடங்களை வெல்வதில் திமுக குறியாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+