சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தனியார் நகை அடகுக்கடை வைத்திருப்பவர்கள்.. அதிகாரிகள் சிக்குகிறார்கள்.. பாயப்போகும் கிரிமினல் வழக்கு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அந்தியோஜனா திட்டத்தின் கீழ் கூட்டுறவு வங்கியில் கிலோ கணக்கில் நகைகள் அடமானம் வைத்து முறைகேடு நடைபெற்றுள்ளது. நகைக்கடன் தள்ளுபடியில் மோசடி செய்தவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு குறைவாக நகை அடமானம் வைத்திருப்பவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். அதன்படி ரூ.6,000 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது. குரும்பூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள 247 நகை பொட்டலங்கள் இல்லை. வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு வழங்கக்கூடிய அந்தியோஜனா திட்டத்தின் கீழ் அவர்களது பெயரில் கிலோ கணக்கில் நகைகள் அடமானம் வைத்ததாக கூறி, பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களிடம் எப்படி கிலோ கணக்கில் தங்கம் இருந்திருக்கும்.

 கூட்டுறவு வங்கிகளில் நூதன முறைகளில் அடேங்கப்பா! நகை கடன் மோசடி- அமைச்சர் ஐ.பெரியசாமி ஷாக் தகவல்கள் கூட்டுறவு வங்கிகளில் நூதன முறைகளில் அடேங்கப்பா! நகை கடன் மோசடி- அமைச்சர் ஐ.பெரியசாமி ஷாக் தகவல்கள்

600 நகைக்கடன்

600 நகைக்கடன்

நகைக்கடன் வாங்கியதில் பெரிய தவறு நடைபெற்றுள்ளது. தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மாவட்டத்திலுள்ள பாப்பையாபுரம் என்ற சொசைட்டியில் மூக்கையா என்பவர் மட்டும் 300 நகைக்கடன் பெற்று உள்ளார. இதுபோல் ஒரு சில நபர்கள் 100, 200, 300, 600 என மொத்தமாக நகைக்கடன் பெற்றுள்ளார்கள். கவரிங் நகைக்கு கடன் வழங்கி உள்ளார்கள்.இப்படி விதவிதமாக மோசடி நடந்து உள்ளது.

கிரிமினல் வழக்கு

கிரிமினல் வழக்கு

கூட்டுறவு சங்க உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் கடன் பெற்றவர்களுக்கும் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள அலுவலர்களுக்கும் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடன் தள்ளுபடி பெற வருபவர்களின் தகுதியை உறுதி செய்த பின்புதான் தள்ளுபடி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும்.

தில்லுமுல்லு

தில்லுமுல்லு

தனியார் நகை அடகுக்கடை நடத்தக் கூடியவர்கள் தங்களிடம் அடமானத்திற்கு வரக்கூடிய நகைகளை, கூட்டுறவு கடன் சங்கத்தில் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . அவர்கள் கூடுதலாக லாபம் அடைந்துள்ளனர் என்ற சந்தேகம் உள்ளது. இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

25 சதவீதம் தள்ளுபடி

25 சதவீதம் தள்ளுபடி

தமிழகத்தில் மொத்தம் ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக மேற்கு மண்டலத்தில் உள்ள சேலம், கோவை, ஈரோடு, நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் ஏறத்தாழ ரூ.2,500 கோடி அளவிற்கு பயிர்க்கடன் தள்ளுபடி அளித்திருக்கிறார்கள். தமிழகத்தின் பயிர்க்கடன் தள்ளுபடியில் 25 சதவீதம் அளவிற்கு இங்கே தள்ளுபடி அளிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக ஆய்வு செய்தபோது குறைந்த நிலம் உள்ள விவசாயிகளுக்கு அதிகளவில் பயிர்க்கடன் தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயம் செய்யாத தரிசு நிலங்களுக்கு ரூ.110 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது" இவ்வாறு அமைச்சர் ஐ பெரியசாமி கூறினார்,.

நகை இல்லை

நகை இல்லை

இதனிடையே ஒரே ஆதார் எண்ணை பயன்படுத்தி ஒரே நபர் பல சங்கங்களில் லட்சக்கணக்கில் நகை கடன்களை பெற்றிருப்பது, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல கூட்டுறவு சங்கங்களில் பல நகை கடன்களின் மூலம் லட்சக்கணக்கிலான ரூபாய் கடன் பெற்றிருந்தது என பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை கடன் வழங்கியதற்காக பெறப்பட்ட 500 பொட்டலங்களில் 261 பொட்டலங்களில் ஆய்வின்போது நகை இல்லை. நகை இல்லாத இந்த பொட்டலங்களின் நகை கடன் மதிப்பு ரூ.1.98 கோடி ஆகும்.

கீழ்குளம்

கீழ்குளம்

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்தில், குமாரக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஒரே ஆதார் எண்ணின் அடிப்படையில் பலர், பல செல்போன் எண்களை பயன்படுத்தி லட்சக்கணக்கில் நகை கடன் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. குமரி மாவட்டம் கீழ்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், ஒரே நபர் 647 நகை கடன்கள் மூலம் ரூ.1.47 கோடி கடன் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றொரு நபர் 5 பவுனுக்கு உட்பட்டு 625 நகை கடன்கள் மூலம் ரூ.1.25 கோடி கடன் பெற்றுள்ளதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுரை

மதுரை

திருப்பத்தூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் ஒரு சிலர் அவர்களுக்குரிய ஆதார் எண்ணை பயன்படுத்தி 538 நகை கடன்கள் மூலம் 5 பவுனுக்கு உட்பட்டு 3 ஆயிரத்து 508 கிராமுக்கு ரூ.74 லட்சம் கடன் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ஒரே நபர் 300-க்கும் மேற்பட்ட நகை கடன்கள் (அனைத்தும் 40 கிராமுக்கு உட்பட்டது) 2 ஆயிரத்து 808 கிராமுக்கு நகைகளை அடகு வைத்து ரூ.65 லட்சம் நகை கடன் பெற்று உள்ளார்கள். மதுரை மாவட்டத்தில் பாப்பையாபுரம் மற்றும் சுந்தரலிங்கபுரம் ஆகிய 2 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி ஒரே நபர் 300-க்கும் மேற்பட்ட நகை கடன்கள் மூலம் ரூ.70 லட்சம் கடன் பெற்று உள்ளார்கள். செங்கல்பட்டு மாவட்டத்தில் நகை அடமானம் வியாபாரம் செய்யும் ஒருவர் செங்கல்பட்டு நகர கூட்டுறவு வங்கியில் 25-க்கு மேற்பட்ட நகை கடன்கள் மூலம் ரூ.8 லட்சம் கடன் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

சுற்றறிக்கை

சுற்றறிக்கை

இதுபோன்ற பல்வேறு முறைகேடுகளை தொடர்ந்து, தகுதியின் அடிப்படையிலான உரிய பயனாளிகளை தவிர மற்றவர்கள் பெற்ற நகை கடன்களை வசூலிக்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். அவர் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மேலாண்மை இயக்குனர், அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகள் மேலாண்மை இயக்குனர்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர், அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த அறிக்கையில், கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன் (40 கிராம்) அளவுக்கு மேற்பட்டு நகை ஈடாக பெற்று கடன் வழங்கப்பட்டு 31-3-2021 மற்றும் 31-7-21 அன்றைய தேதியில் இருந்த நிலுவை விவரங்கள் தொடர்பான தரவுகளை ஆய்வு செய்தபோது சில விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

 ஸ்மார்ட் கார்டு

ஸ்மார்ட் கார்டு

அதன் விவரம் வருமாறு:- தமிழக அரசால் வழங்கப்பட்ட ரேஷன் கார்டில் இடம் பெற்றுள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் (வங்கிகளில்) 5 பவுனுக்கு மேற்பட்டு நகை கடன் பெற்றிருந்தது தெரியவந்துள்ளது. 'ஸ்மார்ட் கார்டு' அடிப்படையில் மாவட்ட வாரியிலான கடன்தாரர்கள் விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் அடிப்படையில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுனுக்கு மேற்பட்டு நகை கடன் பெற்றிருந்தது தெரியவந்துள்ளது. ஆதார் எண் அடிப்படையில் மாவட்ட வாரியான கடன்தாரர்கள் விவரங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சட்ட நடவடிக்கை

சட்ட நடவடிக்கை

ஆதார் எண் மற்றும் ரேஷன் கார்டு எண் அடிப்படையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் 40 கிராமுக்கு மேற்பட்டு நகை கடன் பெற்ற கடன்தாரர்களின் பட்டியலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 40 கிராமுக்கு மேற்பட்டு நகை கடன்கள் பெற்ற கடன்தாரர்களின் நகை கடன்களை வசூல் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் நகை கடன்கள் தவணை கட்ட தவறியிருந்தால் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை பின்பற்றி கடன் தொகைகளை வசூலிக்க வேண்டும்" இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
A kilo of jewelery has been misappropriated from a co-operative bank under the Anthiyojana scheme across Tamil Nadu. Cooperatives Minister I. Periyasamy said. The government has been recommended to register a criminal case against those who committed fraud in the jewelery loan waiver.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X