"மைக்ரோ கட்டுப்பாடு".. லாக்டவுனில் முக்கிய மாற்றம்?.. முதல்வர் மீட்டில் வல்லுனர்கள் சொன்னது என்ன?!
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுடன் இன்று மருத்துவ வல்லுநர்கள் நடத்திய ஆய்வில் கொரோனா லாக்டவுன் குறித்து முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு திங்கள் கிழமையோடு முடிய உள்ள நிலையில், மேலும் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுடன் மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனை நடத்தினார்கள். மேலும் லாக்டவுனை நீட்டிக்கலாமா, தளர்வுகள் கொண்டு வரலாமா என்று ஆலோசனை செய்தனர்.
தமிழ்நாட்டை தற்போது மூன்று வகையாக பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு வகையிலும் எந்த மாதிரியான கட்டுப்பாடுகள், தளர்வுகள் கொண்டு வரலாம் என்பது குறித்து ஆலோசனையை மேற்கொண்டுள்ளனர்.

என்ன
இந்த ஆலோசனையில் தமிழ்நாட்டில் மீண்டும் சில மாவட்டங்களில் கேஸ்கள் உயர்வது குறித்து பேசப்பட்டு இருக்கிறது. பேருந்துகள் இயக்கப்பட்ட பின் 17 மாவட்டங்களில் கேஸ்கள் உயர்ந்துள்ளது. இரண்டு நாட்களாக மீண்டும் புதிய கேஸ்கள் கொஞ்சம் கூடுதலாக வர தொடங்கி உள்ளது. முக்கியமாக கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், மதுரை, திருவண்ணாமலை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து குறையாமல் உயர்ந்து வருகிறது.

17 மாவட்டங்கள்
தருமபுரி , திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, நீலகிரி, பெரம்பலூர், சிவகங்கை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய 17 மாவட்டங்களில் கேஸ்கள் கடந்த 2 நாட்களாக கேஸ்கள் உயர்ந்து வருகிறது.

எப்படி
இன்று முதல்வர்கள் மற்றும் மருத்துவ வல்லுனர்களுடன் நடந்த ஆலோசனையில் இதை பற்றி பேசுகிறார்கள். தளர்வுகள் கொண்டு வந்தால் மக்கள் வெளியே வருகிறார்கள். அதிகம் சுற்றுகிறார்கள். இதனால் கேஸ்களும் அதிகரிக்கிறது என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுடன் நடந்த ஆலோசனையில் கூறியுள்ளனர். ஆனால் அதே சமயம் முழு கட்டுப்பாடு அவசியம் இல்லை என்றும் கூறியதாக தெரிகிறது.

மீண்டும்
மீண்டும் பெரிய அளவில் லாக்டவுன் தேவை இல்லை. தளர்வுகளை கொண்டு வரலாம். அதே சமயம், கட்டுப்பாட்டு பகுதிகளை தனியாக பிரித்து கவனம் செலுத்தலாம் என்று கூறியுள்ளனர். அதன்படி கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கேஸ்கள் குறைந்து வருகின்றன.
Recommended Video

தளர்வுகள் அதிகம்
இங்கு கூடுதல் தளர்வுகள் கொண்டு வரலாம். பேருந்துகளை இந்த மாவட்டங்களுக்கு இடையில் மட்டும் இயக்கலாம். மற்ற மாவட்டங்களிலிலும் சில கூடுதல் தளர்வுகளை அனுமதிக்கலாம் என்று கூறியுள்ளனர். இதனால் திங்கள் கிழமை முதல் இங்கு கட்டுப்பாடுகள் குறைய வாய்ப்புள்ளது.

ஆனால்
கொரோனா கேஸ்கள் குறையாமல் அதிகரிக்கும் மாவட்டங்களுக்கு உள்ளே சிறு சிறு கட்டுப்பாட்டு பகுதிகளை உருவாக்கி அங்கு கூடுதல் ஸ்பெஷல் கட்டுப்பாடுகளை மாவட்ட அளவில் கொண்டு வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். அதாவது கேஸ்கள் அதிகம் உள்ள வார்டு, வட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி மைக்ரோ லாக்டவுன் போல சிறு சிறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படலாம் என்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications