'தி பேமிலி மேன் 2' தொடர் தடை செய்யப்படுமா? அமைச்சர் மனோ தங்கராஜ் பதில் இதுதான்!
சென்னை: 'தி பேமிலி மேன் 2' தொடரை தடை செய்வது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்தார்.
அமேசான் பிரைமில் 'தி பேமிலி மேன் 2' என்ற தொடர் வெளியாகி உள்ளது. இதில் இலங்கையில் உள்ள போராளி குழுக்கள் என்று கூறி மறைமுகமாக விடுதலை புலிகள் அமைப்பை விமர்சனம் செய்வது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பது சர்ச்சையாகி உள்ளது

எனவே இந்த தொடருக்கு தடை விதிக்க வேண்டும் வேண்டும் தமிழகம் முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது. 'தி பேமிலி மேன் 2' தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் 'தி பேமிலி மேன் 2' தொடருக்கு தடை விதிக்கப்படுமா? தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோதங்கராஜிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:- தமிழர்களையும் புண்படுத்தியும், வரலாற்று நிகழ்வுகளை ஒரு பிரிவுடன் சொல்லக் கூடிய சூழல் 'தி பேமிலி மேன் 2' தொடரில் உள்ளது.
அதனால் தான் அதனை தடை செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தோம். இந்த தொடரை சென்சார் மற்றும் கண்காணிப்பு செய்வதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு கிடையாது. இனி அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது என்பது மத்திய அரசை சார்ந்தது என்று அமைச்சர் கூறினார்.
-
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications