தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த சசிகலா .. 'அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது'.. அமைச்சர் சுளீர்
சென்னை: அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்ற தீவிரமாக உள்ள சசிகலா முழு நேர அரசியலில் இறங்கி விட்டார். அவ்வப்போது தொண்டர்களை சந்தித்து பேசும் அவர் மழை, வெள்ள காலங்களில் மக்களை சந்தித்து உதவிகள் செய்து வருகிறார்.
தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்களில் குறை இருந்தால், மக்கள் ஏதாவது கோரிக்கை வைத்தால் அது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிடுவது வழக்கம். தற்போது சசிகலாவும் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

சசிகலா வைத்த கோரிக்கை
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கரும்பு கொள்முதல் விவகாரத்தில் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக கரும்பு வாங்க வேண்டும், அவர்களது வங்கி கணக்கிலேயே பணம் செலுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சசிகலா கோரிக்கை வைத்து இருந்தார். இந்த நிலையில் மதுரையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

பதில் சொல்ல முடியாது
அப்போது கரும்பு கொள்முதல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து சசிகலா தமிழக அரசுக்கு கோரிக்கை விடுப்பது குறித்து நிருபர்கள் அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கேள்வி எழுப்பினர்கள். இதற்கு பதில் அளித்த அவர், ' சசிகலாவிற்கெல்லாம் பதில் சொல்ல நாங்கள் தயாராக இல்லை' என்று கூறினார். முன்னதாக அமைச்சர் நிருபர்களிடம் பேசியதாவது:-

17 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்
மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தமிழகம் முழுவதும் 17 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகளை பத்திரமாக ஊர் கொண்டு சேர்க்கவும் மீண்டும் அவர்களது இடத்திற்கு வந்து சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க அதிகாரிகள் தரப்பில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு எந்தவிதமான சிரமும் இன்றி பயணிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது தவறு நடக்காமல் இருக்க அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை போல ஓமிக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தமிழக முதல்வரின் உத்தரவின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது . கட்டுப்பாடுகள் தொடர்கிறது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications