'வலிமை' வந்தவுடன் சிமெண்ட் விலை குறைந்துவிடும்.. சட்டசபையில் அப்டேட் கொடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள், ' கட்டிட கட்டுமானத்துக்கு சிமெண்ட் மிக முக்கிய பொருளாக இருந்து வருகிறது.
Recommended Video
ஆனால் அதன் விலையோ விண்ணை முட்டும் அளவுக்கு இருக்கிறது. சிமெண்ட் விலை உயர்வால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி இருக்கும் தொழிலாளர்களும் வேலை இழக்கும் அபாயம் நிலவுகிறது.

சிமெண்ட் விலை உயர்வு
நமது அண்டை மாநிலங்களில் சிமெண்ட் விலை குறைவாக அதாவது 300 முதல் 350 வரை மட்டுமே விற்கப்படுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை 450 முதல் 490 வரை விற்கப்படுகிறது. சிமெண்ட் ஆலை அதிபர்கள் பேசி வைத்து விலையை அதிகமாக உயர்த்தி விற்பனை செய்கின்றனர். விலை உயர்வதை தடுக்கும் வகையில் தமிழக அரசே சிமெண்ட் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்' என்று பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் பேசினார்.

முதல்வர் உத்தரவு
இதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு , ' தமிழகத்தில் கடந்த ஜுன் மாதம் வரை சிமெண்ட் விலை 490 என்று விற்பனை செய்யப்பட்டு வந்தது. சிமெண்ட் விலையை குறைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சிமெண்ட் ஆலை நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி முதல் தர சிமெண்ட் 420 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வலிமை வரட்டும்
TANCEM மூலம் புதிய கிளை உருவாக்கப்பட்ட பின் 17 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அரசு சார்பில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள வலிமை சிமெண்ட் பயன்பாட்டிற்கு வந்த பின் வெளிச்சந்தைகளில் சிமெண்ட் விலை குறையும். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். வலிமை என்ற புதிய வணிகப் பெயர் கொண்ட சிமெண்ட் இந்த ஆண்டு வெளிச்சந்தையில் தமிழ்நாடு அரசு சார்பாக அறிமுகப்படுத்தப்படும் என்று நேற்று சட்டசபையில்அமைச்சர் கூறி இருந்தார்.

அஜித் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். வலிமை திரைப்பட அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள் ஏங்கி தவிக்கின்றனர் என்றே கூறலாம். பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பிரபலங்களிடமும் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு நச்சரித்து வந்தனர். இந்த நிலையில் வலிமை பட பெயரில் தமிழக அரசு சிமெண்ட் அறிமுகம் செய்யவிருப்பது அஜித் ரசிகர்கள், நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துளளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications