செம குஷியில் மாணவர்கள்! தொடர்ந்து 4 நாட்கள் பள்ளி விடுமுறை - தமிழக அரசின் ஹேப்பி நியூஸ்
சென்னை: ஏப்ரல் 16 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறையளித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள உத்தரவால் மாணவர்களுக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளன.
தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய தமிழ்நாடு அரசு பள்ளிகளை திறக்க உத்தரவிட்டது.

கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் இயங்கி வருகின்றன. விரைவில் பொதுத் தேர்வுகள் தொடங்க இருப்பதால் ஆசிரியர்களும் மாணவர்களும் முழு மூச்சில் அதற்கு தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை தமிழ் புத்தாண்டு காரணமாகவும், ஏப்ரல் 15 ஆம் தேதி புனித வெள்ளி காரணமாகவும் அரசு விடுமுறை வருகிறது. அதேபோல் ஏப்ரல் 17 ஆம் தேதியன்று ஞாயிறு விடுமுறை விடப்படுகிறது. இதற்கு இடைப்பட்ட ஏப்ரல் 16 ஆம் தேதி சனிக்கிழமை மட்டும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டிய நிலை இருந்தது.
எனவே மாணவர்களும், முழுமூச்சில் விடுமுறையை கொண்டாடவும், வெளியூர்கள், சொந்த ஊர்களுக்கு பெற்றோர்களுடன் சென்று வரவும் வசதியாக ஏப்ரல் 16 ஆம் தேதி சனிக்கிழமையும் விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவித்து உள்ளார். இதன் மூலம் 4 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை வருவதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications