அமைச்சர் பிடிஆர் காரில் தேசியக் கொடி பறந்தது கூட தெரியாதா? பாஜகவினர் அநாகரீகம்! தலைவர்கள் வேதனை!
சென்னை: தேசியக் கொடி பறக்கும் காரில் செருப்பை வீசுவதா? என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வேதனைத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அமைச்சர் பிடிஆர் கார் மீது காலணியை வீசிய செயல் அநாகரீகமானது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி விடுத்த அறிக்கையின் விவரம் வருமாறு;

ராணுவ வீரர்
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகில் உள்ள தும்மகுண்டு ஊராட்சியைச் சேர்ந்த 22 வயது நிரம்பிய ராணுவ வீரர் லட்சுமணன் உள்ளிட்ட நான்கு வீரர்கள் ஜம்மு காஷ்மீர் பகுதியில், தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியதில் வீரமரணம் அடைந்துள்ளனர். இன்று காலை லட்சுமணனின் உடல் தனி விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து இன்று பகல் 12.15 மணிக்கு அவரது சொந்த கிராமத்திற்கு வந்து சேர்ந்தது.

பா.ஜ.க.வினர் அநாகரீகம்
அவருக்கு அனைத்து கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வீரமரணம் அடைந்த லட்சுமணனுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த போது, பா.ஜ.க.வினர் மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளனர்.

அநாகரீகப் போக்கு
அதுமட்டுமல்லாமல், அவர் வந்த கார் மீது காலணிகளை வீசி தாக்குதல் நடத்தியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. எதையும் அரசியல் ஆதாய நோக்கோடு செயல்படுகிற பா.ஜ.க.வினர், சகிப்புத்தன்மை இல்லாமல் இத்தகைய அநாகரீக செயல்களில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற அநாகரீகப் போக்கு தொடருமேயானால், அதற்கான எதிர்வினையை தமிழக பா.ஜ.க.வினர் சந்திக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன்.

தமிமுன் அன்சாரி
இதனிடையே அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது காலணி வீசப்பட்ட விவகாரம் குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி டிவிட்டரில் தனது வேதனையை பகிர்ந்துள்ளார். அதன் விவரம் வருமாறு; ''தமிழக நிதியமைச்சர் மாண்புமிகு பிடிஆர் அவர்கள், தேசிய கொடியேற்றிய காரில் வந்த போது, வலதுசாரி பாஸிஸ கும்பல் அவரது காரின் மீது செருப்பு வீசியதை மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.''
-
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications