தேர்வு நடத்துற TNPSC வெளியிட்ட.. அறிக்கையை கவனிச்சீங்களா? தேர்வாணையமே இத்தனை பிழைகளை செய்யலாமா?
சென்னை: TNPSC குரூப் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது தொடர்பாக TNPSC தேர்வாணையம் விளக்கம் கொடுத்துள்ளது. ஆனால் அந்த விளக்கத்திலேயே ஏகப்பட்ட தவறுகள் இருப்பது விமர்சனங்களை சந்தித்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளில் நடந்த பிரச்சனைகள் மிகப்பெரிய அளவில் வெடிக்கும் வாய்ப்புகள் உள்ளன. நேற்று தமிழகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள், யாரும் எதிர்பார்க்காத வகையில் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டன. ஒரு முக்கிய தேர்வாக அமைய வேண்டிய இந்தத் தேர்வு நாள், நிர்வாகக் குளறுபடிகளாலும், தொழில்நுட்பக் கோளாறுகளாலும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

தேர்வாணையம் விளக்கம்
TNPSC குரூப் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது ஆனது தொடர்பாக TNPSC தேர்வாணையம் விளக்கம் கொடுத்துள்ளது. அதில், சென்னையில் இன்று 08.02.2026 நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-II (மற்றும்) IIA பணிகள்) பிரதான தேர்வுகளுக்கான முற்பகல் (ம) பிற்பகல் நடைபெறவிருந்த எழுத்துதேர்வுகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் 3 மையங்களில் நடத்த இயலவில்லை. எனவே தேர்வர்கள் நலனை முன்னிட்டு இன்று நடைபெறவிருந்த இரண்டு தேர்வுகளும் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டு பின்னர் வேறு தேதியில் நடத்தப்படும். இது குறித்து தேர்வர்கள் அனைவருக்கும் மறுதேர்வு நடைபெறும் நாளுக்கு 15 தினங்களுக்கு முன்பாக தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-Mail மூலம் தகவல் அளிக்கப்படும்.
எதிர்வரும் 22.02.2026 மு.ப நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-II பணிகள்) பொது அறிவு தேர்வு (தாள்-II) (Descriptive Type) அன்றைய தினமே நடத்தப்படும். இது தொடர்பாக தேர்வர்களுக்கு மீண்டும் சரிபார்த்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Hall Ticket) மீண்டும் 13.02.2026 அன்று வழங்கப்படும்.
அ.சண்முக சுந்தரம்.இஆப. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், என்று கூறி உள்ளார்.
ஏகப்பட்ட தவறுகள்
ஆனால் ஆனால் அந்த விளக்கத்திலேயே ஏகப்பட்ட தவறுகள் இருப்பது விமர்சனங்களை சந்தித்துள்ளது. பல இடங்களில் ஒற்றுப்பிழை, பல இடங்களில் வார்த்தைகளை எழுதுவதில் கூட பிழைகள் உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளனர். ஒரு தேர்வாணையமே இவ்வளவு தவறுகள் செய்யலாமா என்று நெட்டிசன்கள் விமர்சனங்களை வைக்கின்றனர்.
தேர்வு ரத்து என்ன காரணம்?
சென்னையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A முதன்மை தேர்வு, அரும்பாக்கத்தில் உள்ள தேர்வு மையத்தில் ஹால் டிக்கெட் குளறுபடி ஏற்பட்டதுதான் பிரச்சனையின் தொடக்கம். தேர்வு எழுத இடம் ஒதுக்கப்படாததால் மாணவர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். நந்தனத்தில் தான் இருக்கை ஒதுக்கீடு என கூறி அவர்கள் வெளியே அனுப்பப்பட்டதால் தேர்வர்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமர்ந்து தேர்வு மைய அதிகாரிகளுடன் 700க்கும் மேற்பட்ட தேர்வர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து சென்னை முழுக்க பிரச்சனை இருப்பது தெரிந்ததால்.. தமிழ்நாடு முழுக்க தேர்வு ரத்தானது.
முன்னதாக அறிவிக்கப்பட்ட அட்டவணையின்படி, நேற்று பிப்ரவரி 8-ஆம் தேதி மதிய அமர்வில் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வும் (தாள் I), பிப்ரவரி 22-ஆம் தேதி பொது அறிவுத் தேர்வும் (தாள் II) நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும், இன்றைய குளறுபடிகள் காரணமாக முதல் தேர்வு மட்டும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான புதிய தேதிகள் குறித்து டிஎன்பிஎஸ்சி அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications