சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பேஸ்புக் தகவலை வைத்தே உங்கள் பேங்க் அக்கவுண்டை எளிதாக ஹேக் செய்ய முடியும்!

Google Oneindia Tamil News

சென்னை: இன்டர்நெட் பேங்கிங் வைத்துள்ளீர்களா நீங்கள். அப்படி என்றால் உங்கள் வங்கி கணக்கை பாதுகாக்க பேஸ்புக்கில் பிறந்த நாள் , செல்போன் எண்ணை உடனே நீக்குவது நல்லது என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.'

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எதையும் மறைத்து வைப்பது என்பது எளிதான காரியம் அல்ல. எல்லாமே திறந்த புத்தகம் என்கிற அளவுக்கு தொழில்நுட்பங்கள் நம்மை மாற்றி வருகின்றன. அதற்கு முக்கிய காரணமாக சமூக ஊடகங்கள் இருக்கின்றன.

ஆனால் இன்றைக்கு ஹேக்கர்கள் ஒருவரின் வங்கி கணக்கை ஹேக் செய்து பணத்தை அபேஸ் செய்ய அதிகம் பயன்படுத்துவது பேஸ்புக்கில் உள்ள பிறந்த நாள் மற்றும் செல்போன் தகவலை வைத்து தான் என்பது அதிர்ச்சி தரும் தகவல் ஆகும். எனவே பேஸ்புக்கில் அதை நீக்குவதே நல்லது.

பேஸ்புக்கில் பிறந்த நாள்

பேஸ்புக்கில் பிறந்த நாள்

உஙகள் வங்கி கணக்கை ஹேக் செய்ய விரும்பும் சைபர் குற்றவாளிகள், உங்கள் பேஸ்புக்கில் இருந்து, பிறந்த தேதியை பெயரையும் குறிப்பெடுத்துக் கொள்வர்கள். இந்த தகவலைவைத்துக் கொண்டு வருமான வரித்துறை இணைதளத்திற்கு சென்று புதுப்பிப்பதன் மூலம் உங்கள் செல்போன் எண்ணை பெற்று கொள்வார்கள். இதன் மூலம் அவர்களுக்கு பான் கார்டு தகவல் கிடைத்துவிடும்.

புது சிம்கார்டு வாங்குவார்கள்

புது சிம்கார்டு வாங்குவார்கள்

அதன் பின்னர் மொபைல் போன் திருடுபோனதாக காவல் நிலையத்தில் புகாரை பதிவு செய்வார்கள். காவல் நிலையத்தில் ஒரு எப்.ஐ.ஆரை பெற்று, புதிய சிம்கார்டுகளை உங்கள் செல்போன் நம்பரில் பெறுவார்கள். அதை வைத்து உங்கள் ஆன்லைன் வங்கி கணக்கை திறப்பது எளிதாக இருக்கும்.

உங்கள் தகவல் கிடைக்கும்

உங்கள் தகவல் கிடைக்கும்

இணையதள முகவரிக்கு சென்று forgot my password தேர்வினை கிளிக் செய்வார்கள். பின்னர் எளிதாக புதிய பாஸ்வேர்டு உருவாக்கி பின்கோடு மற்றும் அனைத்து தரவுகளும் அவர்களுக்கு முழுமையாக கிடைத்துவிடும்.

அப்புறம் அவர்கள் வசம்

அப்புறம் அவர்கள் வசம்

பிறகு என்ன? உங்கள் வங்கி கணக்கிலிருந்து ஆன்லைன் மூலமாக பணி பரிமாற்றத்தை எளிதாக முடித்துவிடுவார்கள். இந்த பிரச்சினையை தீர்க்க பேஸ்புக்கில் உங்கள் பிறந்த நாள், தேதி, வருடம், செல்போன் எண் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

English summary
Do you have internet banking? In that case, cybercrime police say it would be better to delete the birthday and cell phone number on Facebook immediately to protect your bank account. '
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X