சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவை விட வேகமெடுக்கும் தமிழக டெஸ்டிங்.. விரைவில் தமிழகத்தை விட்டு ஓடினால் நல்லது!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் சோதனை அதிகரித்துள்ளது. இன்று 32 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 31-ஆம் தேதி முதல் தினமும் தமிழகத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதன்பின்னர் 1500-க்கும் மேல் சென்றது பாதிப்பு எண்ணிக்கை.

இதைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 19-ஆம் தேதி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

கொரோனா: வட சென்னையில் அணிவகுத்து வந்த கமாண்டோஸ்.. தெறித்து ஓடிய புள்ளீங்கோ!கொரோனா: வட சென்னையில் அணிவகுத்து வந்த கமாண்டோஸ்.. தெறித்து ஓடிய புள்ளீங்கோ!

முதல்முறை

முதல்முறை

அன்றைய தினம் முதல் 2000, 2500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் தினமும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று முதல்முறையாக தமிழகத்தில் ஒரே நாளில் 3509 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70,977 ஆக உயர்ந்துள்ளது.

சோதனை

சோதனை

இன்று மட்டும் 30,307 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. அது போல் 32 ஆயிரம் சளி மாதிரிகள் இன்று சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 9.60 லட்சம் பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் 585 பேரின் முடிவுகள் இன்னும் வரவில்லை. சென்னையில் மட்டும் இன்று 1,834 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அச்சம் வேண்டாம்

அச்சம் வேண்டாம்

இதனால் இதுவரை சென்னையில் 47,650 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 3500 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கண்டு யாரும் அச்சப்பட வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். டெஸ்டிங் அதிகரிக்க அதிகரிக்க பாதிப்பும் அதிகரிக்கத்தான் செய்யும். இன்று மட்டும் 32 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது மிகவும் பாசிட்டிவான செய்தி என்கிறார்கள் மருத்துவர்கள்.

5 இலக்கங்கள்

5 இலக்கங்கள்

இத்தனை நாட்கள் வரை 4 இலக்கங்களில் மட்டுமே சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இன்று முதல்முறையாக 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பேசிய சுகாதாரத் துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன், "நாங்கள் டெஸ்டிங்கை அதிகரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்து வருகிறோம்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. வெகு விரைவில் தமிழகத்தை விட்டு ஓடினால் நல்லதுதானே!

English summary
Today 32,000 and more samples were tested in Tamilnadu which gives positive vibes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X