இடி மின்னலோடு டார்க்கெட்.. இன்று 8, நாளை 13 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை..உங்கள் ஊர் எப்படி?
சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களிலும், நாளை 13 மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கப்போகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் இறுதியில் துவங்கிய நிலையில் முதல் 2 வாரங்கள் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
அதன்படி பருவமழை என்பது குறைந்தது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் பெரும்பாலான நாட்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. இதற்கிடையே மாண்டஸ் புயலால் மீண்டும் பல மாவட்டங்கள் மழையை பெற்றன. அதன்பிறகு மழை என்பது தமிழ்நாட்டில் பல இடங்களில் மறைந்து போனது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு 11.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 330 கிலோமீட்டர் கிழக்கு-தென்கிழக்கில் நிலை கொண்டிருந்தது. இது சற்று வலு குறைந்து மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் இலங்கை கடலோரப்பகுதியின் அருகில் நிலவக்கூடும். அதன்பிறகு மேலும் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நாளை காலை நிலவக்கூடும்.

இன்று 8 மாவட்டங்களில் கனமழை
இதனால் இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை 13 மாவட்டங்களில் கனமழை
அதேபோல் நாளைய தினம் தென்தமிழக மாவட்டங்களின் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிசம்பர் 27, 28 எப்படி?
இதுதவிர டிசம்பர் 27, டிசம்பர் 28 ஆகிய தினங்களில் தமிழ்நா, புதுவை மற்றும் காரைக்கால் பகுதகிளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
மேலும் இன்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள் குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

4 நாளுக்கான அறிவுரை
டிசம்பர் 27ல் குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டி தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறவாளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். டிசம்பர் 28 ல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த 4 நாட்களில் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
-
வேலூரை மொத்தமாக நனைத்த கோடை மழை.. மதியம் வரைக்கும் 104 டிகிரி வெயில்.. மாலையில் கனமழை! -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
Election: இதுவரை 651 கோடி பறிமுதல்.. தமிழ்நாட்டில் ரூ.170 கோடி சிக்கியது.. தேர்தல் ஆணையம் தகவல் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்!












Click it and Unblock the Notifications