தக்காளி விலை தாறு மாறு... சட்னி, சாம்பாருக்கு தக்காளி எப்படி வாங்குவது?- இல்லத்தரசிகள் கவலை
சென்னையில் கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
சென்னை: மழையால் தக்காளி செடிகள் அழுகத் தொடங்கியுள்ளன. சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் தக்காளி விலை தாறு மாறாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி கிலோ 100 ரூபாயை எட்டியுள்ளதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.
சென்னையில் கடந்த மாதம் ஒரு கிலோ 5, ரூபாய்க்கு கூவி கூவி விற்கப்பட்ட தக்காளி மளமளவென விலை உயர்ந்தது. கடந்த வாரம் ஒரு கிலோ நவீன் தக்காளி ரூ 45 க்கும் நாட்டு தக்காளி ரூ 38 க்கும் விற்பனை செய்யப்பபட்டது.
ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது.

தக்காளி வரத்து குறைவு
சென்னையின் தக்காளி தேவையை பூர்த்தி செய்ய தமிழகத்தின் கிருஷ்ணகிரி, ராயகோட்டை, கர்நாடகா , மற்றும் ஆந்திராவிலிருந்து உள்ளிட்ட வடமாநிலங்களிலிருந்து தக்காளி வரும் . வழக்கமாக சென்னையின் தக்காளி தேவையை பூர்த்திசெய்ய நாளொன்றுக்கு 1000டன் அளவு வரத்து வந்து கொண்டிருந்த நிலையில். கோடைக்கால விளைச்சல் குறைந்த நிலையில் தக்காளி வரத்து குறைந்து 500 டன் தக்காளி மட்டுமே வந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

சென்னையில் தக்காளி விலை
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி மொத்த விற்பனையில் ரூ.80க்கும், சில்லறை விற்பனையில் ரூ.100க்கும் விற்பனையாகி வருகிறது. வரும் நாட்களில் தக்காளி விலை குறையுமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர். தக்காளி விலை உயர்ந்து வருவதால் சட்னி, சாம்பாருக்கு எப்படி வாங்குவது என்று இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.

மதுரையில் தக்காளி விலை
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் முதல் தர தக்காளி கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரையும், இதற்கு அடுத்த ரகம் கிலோவுக்கு ரூ.85 வரையும் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமீபத்தில் பெய்த மழை காரணமாக தக்காளிகள் செடியிலேயே அழுகி விடுகின்றன. இதனால், விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைவு உள்ளது. ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தக்காளிக்கும் தட்டுப்பாடு உள்ளது. 15 கிலோ எடை கொண்ட ஆந்திரா தக்காளி ஒரு பெட்டி ரூ.900 வரை விற்பனையாகிறது. சிறு, சிறு கடைகளில், சிறிய மார்க்கெட்டுகளில் தக்காளியின் சில்லரை விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

மழையால் வரத்து குறைவு
மதுரை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால், இந்த வாரத்தில் தக்காளியின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. தக்காளி தவிர மற்ற காய்கறிகளின் விலை சீராகவே இருக்கிறது. விரைவில் தக்காளி வரத்து அதிகரித்துவிடும். அதன்பின்னர் விலை படிப்படியாக குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications