சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக சட்டசபை தேர்தலில் மிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் 20 வேட்பாளர்கள் விவரம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் மிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் 20 வேட்பாளர்களின் பட்டியலை இப்போது பார்ப்போம்.

1. இந்த பட்டியலில் முதல் இடத்தில் திண்டுக்கல் ஐ பெரியசாமி உள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளரை விட 135571 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஐ பெரியசாமி தான் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் ஆவார்.

2. அதற்கு அடுத்தபடியாக 2வது இடத்தை திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட எ.வ.வேலு பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தணிகைவேலை 94673 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

ஸ்டாலின் முதல்வர்.. சபாநாயகர் யார் தெரியுமா?.. இனி சிரிப்பலையால் சிவக்க போகும் ஜார்ஜ் கோட்டை!ஸ்டாலின் முதல்வர்.. சபாநாயகர் யார் தெரியுமா?.. இனி சிரிப்பலையால் சிவக்க போகும் ஜார்ஜ் கோட்டை!

பூந்தமல்லி

பூந்தமல்லி

3. பூந்தமல்லி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ராஜமன்னாரை 94110 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

4. எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சம்பந்தகுமாரை 93802 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வென்றார்,

கொளத்தூர்

கொளத்தூர்

5. திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கே.என்.நேரு, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பத்மநாபனை 85109 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்,

6. கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முக ஸ்டாலின் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆதிராஜராமை 70384 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

7. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கசாலியை 69355 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

8. திருச்சுழி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தங்கம் தென்னரசு, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜசேகரை 60992 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர்

9. திருக்கோவிலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட பொன்முடி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் கலிவரதனை 59680 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வென்றார்.

10.மணச்சநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிரவன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பரஞ்சோதியை 59618 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

ராமசந்திரன்

ராமசந்திரன்

11. மாதவரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட சுதர்ஷன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மூர்த்தியை 57071 வாக்குகள் வித்தியாத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

12. தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட ராமசந்திரன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் மூர்த்தியை 56226 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

காங்கிரஸ்

காங்கிரஸ்

13. கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிளட்ட ராஜேஷ்குமார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜுடே தேவை 55400 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

14. ஓமலூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மணி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலத்தை 55294 வாக்குகள் வித்தியாத்தில் தோற்கடித்து வென்றார்.

நாசர் வெற்றி

நாசர் வெற்றி

15. ஆவடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட நாசர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் மாபா பாண்டியராஜனை 55275 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

16. திரு.வி.க.நகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட சிவகுமார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கல்யாணியை 55013 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

17. பெரம்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்டி சேகர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் தனபாலனை 54976 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

இனிகோ இருதயராஜ் வெற்றி

இனிகோ இருதயராஜ் வெற்றி

18. திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ், தன்னை எதிர்த்து போட்டியிட்ட வெல்லமண்டி நடராஜனை, 53797 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

19. திருவையாறு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட துரை சந்திரசேகரன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வெங்கடேசனை 53650 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

20. பாளையம்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அப்துல் வாகப், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜெரால்டுவை 52141 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

English summary
Top 20 candidates who won by a huge margin in the Tamil Nadu Assembly elections 2021. i periyasamy, ev velu and krishnasamy top 3 in list.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X