ஜஸ்ட் 2 நிமிஷம்தான்.. மொத்த டிக்கெட்டும் காலி.. அதிர்ந்த மக்கள்.. வந்துவிழுந்த ரயில்வேயின் குட்நியூஸ்
சென்னை: பண்டிகை காலங்களில் அதிகப்படியான ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்... திடீரென இப்படி ஒரு கோரிக்கை எழுவதற்கு என்ன காரணம்?
தமிழகத்தில் வார இறுதி நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் அல்லது தொடர் விடுமுறை நாட்களில், அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும் வழக்கம்.
இதற்காகவே, பயணிகளின் வசதிக்காக, போக்குவரத்துக் கழகமும், ரயில்வே துறையும், பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது... ஒவ்வொரு தருணத்திலும், சிறப்பு பஸ்களையும், கூடுதல் ரயில்களையும் இயக்கி வருகிறது.

பொங்கல் பண்டிகை: அந்தவகையில், விரைவில் பொங்கல் பண்டிகை வருகிறது.. அதாவது, ஜனவரி 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை போகி பண்டிகை தொடங்குகிறது.. ஜனவரி 15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி மாட்டுப் பொங்கல், 17-ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தமிழக மக்களின் மிக மிக முக்கியமான பண்டிகை என்பதால், பொதுமக்களின் சேவையை கருத்தில் கொண்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர்களுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவுகள் முன்கூட்டியே தொடங்கிவிட்டது.
செப்டம்பர் 13ம் தேதி முதல் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது.. அந்தவகையில், ஜனவரி 11-ம் தேதி பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையடுத்து, காலை 8 மணிக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில், பாண்டியன், பொதிகை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட ரயில்களின் முன்பதிவு 2 நிமிடங்களில் முடிந்து, காத்திருப்போர் பட்டியல் காட்டியது.
ரயில் பெட்டிகள்: அதாவது, 8 மணிக்கு ரிசர்வேஷன் தொடங்கிய நிலையில், காலை 8.02-க்கெல்லாம் முக்கிய ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் காட்டியது.
சென்னையில் இருந்து ஜனவரி 12- ம்தேதி மாலை அல்லது இரவில் தென் மாவட்டங்களுக்குப் புறப்படும் கன்னியாகுமரி, நெல்லை, பொதிகை, முத்துநகர், பாண்டியன் உள்ளிட்ட ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வகுப்பு பெட்டிகளில் அடுத்தடுத்து டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியலுக்கு வந்தது. அதன் பிறகு ஏ.சி. வகுப்பு பெட்டிகளுக்கான டிக்கெட் முன்பதிவு படிப்படியாக நடைபெற்றது.
பொதிகை : நேற்று மதியம் நிலவரப்படி, நெல்லை, பாண்டியன், கன்னியாகுமரி, பொதிகை, முத்துநகர் ஆகிய ரயில்களில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் காத்திருப்போர் பட்டியலும் முடிந்து, பதிவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டது.. சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்லும் மலைக்கோட்டை விரைவு ரயிலில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் 334 பேரும், கோவைக்குச் செல்லும் சேரன் ரயிலில் 294 பேரும், நீலகிரி ரயிலில் 180 பேரும் காத்திருப்போர் பட்டியலில் இருந்தனர்.
இதேபோல, சென்னையில் இருந்து பகல் நேரத்தில் இயக்கப்படும் வைகை, பல்லவன் ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் எண்ணிக்கை வந்தது.
இணையதளம்: ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் முன்பதிவு மையங்களில் பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று நடைபெற்றது. டிக்கெட் முன்பதிவு மையங்களில் ஒரு விண்ணப்பம் மட்டுமே ஏற்கப்பட்டதால், பயணிகள் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்தனர்.. இனியாவது, பண்டிகை காலத்தில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கையானது, ரயில்வே அதிகாரிகளின் கவனத்துக்கும் சென்றது.. இதுகுறித்து அதிகாரிகள் சொன்னபோது, பொங்கல் பண்டிகை டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தென்மாவட்ட விரைவு ரயில்களின் தூங்கும் வசதியுள்ள பெட்டிகளில் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன. அதிகமாக காத்திருப்பு பட்டியல் உள்ள வழித்தடங்களைத் தேர்வு செய்து, சிறப்பு ரயில்களை இயக்குவது குறித்து ஆலோசனை நடத்தி, பிறகு, அறிவிக்கப்படும்.
பெருத்த நம்பிக்கை: ஜனவரி 13-ம் தேதி பயணிக்க விரும்புவோர் வெள்ளிக்கிழமை (செப். 15) ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில்வேயின் இந்த அறிவிப்பானது, பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications