ரயில் டிக்கெட் முன்பதிவு.. இந்த 6மணி நேரங்களில் செய்ய முடியாது.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு
சென்னை : இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு இரவில் 6 மணிநேரம் ரயில் டிக்கெட் முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது இன்று இரவு முதல் நவ.20-ம் தேதி வரை இரவு 11:30 மணி முதல் வரை அதிகாலை 5:30 மணி வரை முன்பதிவு வசதி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ரயில் சேவைகள் கொரோனா காரணமாக குறைந்தன. கொரோனா தொற்று குறைந்த பின்னர் சிறப்பு ரயில்களாக ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பல்வேறு ரயில் சேவைகள் படிப்படியாக தொடங்கி உள்ளன. தற்போதைய நிலையில் சிறிய நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள், முன்பதிவு இல்லாத பல ரயில்சேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன.

முன்பதிவு
கொரோனா பரவல் காரணமாக கடந்த 19 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விழுப்புரம்-மயிலாடுதுறை இடையேயான முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில் சேவை கடந்த புதன்கிழமை (நவ.10) முதல் மீண்டும் தொடங்கப்பட்டது.

மதுரை ரயில்
கோவை ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவையும் (நவ.10) தொடங்கியது. கோவை ரயில் நிலையத்தில் இருந்து தினமும் மதியம் 2.10 மணிக்குப் புறப்படும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்:06463), மாலை 4.40 மணிக்குப் பழநி சென்றடைகிறது. பழநியில் இருந்து தினமும் மாலை 4.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06479) இரவு 7.40 மணிக்கு மதுரை சென்றடைகிறது. இந்த இரண்டு ரயில்கள் மட்டுமல்ல, கோவை மேட்டுப்பாளையம், தாம்பரம் சென்னை ரயில் என அனைத்து ரயில் சேவைகளும் பழையபடி தொடங்கப்பட்டு வருகின்றன.

முன்பதிவு ரத்து
இந்நிலையில் கொரோனாவுக்கு முந்தய கால ரயில் சேவையை அமலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறது தெற்கு ரயில்வே, அதன் எதிரொலியாக, இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு இரவு 6 மணிநேரம் ரயில் டிக்கெட் முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

6 நாட்களுக்கு ரத்து
அதாவது இன்று இரவு முதல் நவ.20-ம் தேதி வரை இரவு 11:30 மணி முதல் வரை அதிகாலை 5:30 மணி வரை முன்பதிவு வசதி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த ஒரு வாரத்திற்கு பயணிகள் காலை 5.30 மணி முதல் இரவு 11.30க்குள் மட்டுமே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications