பிரதமர் மோடி வருகை.. சென்னை மெட்ரோ வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
சென்னை : பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி நாளை சென்னை மெட்ரோ ரயிலில் மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை
இலவசமாக பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில், "வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் பகுதி- 1 விரிவாக்க வழித்தடத்தை, நாளை (14/02/2021) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பதையொட்டி, சென்னை மெட்ரோ ரயிலில் நாளை (14/02/2021) மட்டும் மதியம் 02.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை பொதுமக்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம்" என அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வந்து வண்ணாரப்பேட்டை டும்கோ நகர் வரை மெட்ரோ ரயில் விரிவாக்க பகுதியை தொடக்கி வைக்கிறார். இதேபோல் தமிழக அரசின் பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.