Trichy East: முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல்? பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதிக்கு தேர்தல் ஆணையம் விரைவில் இடைத்தேர்தலை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி கிழக்கு தொகுதியில் அமைய உள்ள வாக்குச்சாவடிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டதால் விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக முதல்வர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியை தக்க வைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியானதாக அந்த தொகுதி அறிவிக்கப்பட்டது.

Trichy East By election for the Tiruchirappalli East constituency announcement expected soon

எனினும் தேர்தல் வழக்கு நிலுவை காரணமாக இந்த தொகுதிக்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படாமல் உள்ளது. திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்படாமல் உள்ளது. தடை காரணமாக சமீபத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தேர்தல் அறிவிப்போடு திருச்சி கிழக்கு உள்ளிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. வழக்கு நிலுவையில் இருப்பதால் தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.

இதற்கிடையே, திருச்சி கிழக்கு தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில், திருச்சி கிழக்கு தொகுதியில் அமைய உள்ள வாக்குச்சாவடிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு

சிசிடிவி, போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தயாள் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுகளை செய்த பிறகு பணிகளை விரைந்து முடிக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வின் போது அதிகாரிகளும் உடன் இருந்தனர். வாக்குச்சாவடிகளுக்கான தடையற்ற மின்சாரம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் உள்ளிட்டவை முறையாக உள்ளதா? என்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

இதனால் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதா? என்ற பரபரப்பு திருச்சி கிழக்கு தொகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில் ஆளும் தவெக, பிரதான எதிர்க்கட்சியான திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+