பிரதமரின் வீடு கட்டும் திட்டம்...தமிழகத்தில் முறைகேடு... விசாரணைக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!!
சென்னை: பிரதமரின் வீடு கட்டித்தரும் திட்டத்திலும் (Pradhan Mantri Awas Yojana) தமிழகத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக அடுத்தடுத்து செய்திகளாக வெளிவருகின்றன, இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை மத்திய, மாநில ஆட்சியாளர்கள் தாமதமின்றி உறுதி செய்ய வேண்டும் என்று அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ''பிரதமரின் வேளாண்மை நிதி உதவி திட்டத்தைப் போல பிரதமரின் வீடு கட்டித்தரும் திட்டத்திலும் (Pradhan Mantri Awas Yojana) தமிழகத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக அடுத்தடுத்து செய்திகளாக வெளிவருகின்றன.

உயிரோடு இருப்பவர்களின் பெயரில் அவர்களுக்கே தெரியாமல் வீடு கட்டிக் கொடுத்ததாக பணம் கையாடல் செய்ததாக மட்டுமின்றி, இறந்தவர்களின் பெயராலும் இந்த மோசடி நிகழ்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

ஏழை, எளிய மக்களின் நலனுக்கான இத்தகைய திட்டங்களில் மனசாட்சியின்றி செய்யப்பட்டுள்ள முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்துவதையும் , அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதையும் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் தாமதமின்றி உறுதி செய்ய வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications