சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் 9,10 வகுப்புகளில் மாணவர்கள் இடைநிற்றல் 100% அதிகரித்துள்ளது அதிர்ச்சி தருகிறது- தினகரன்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 9,10-ம் வகுப்புகளில் மாணவர்கள் இடைநிற்றல் 100% அதிகரித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

TTV Dhinakaran worries on School dropouts 100% increase in Tamilnadu

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 9 மற்றும் 10 வகுப்புகளில் மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் இடைநிற்றல் 100% அதிகரித்திருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த வகுப்புகளில் 2015-16 கல்வியாண்டில் 8%ஆக இருந்த இடைநிற்றல் 2017-18 கல்வியாண்டில் 16.2%ஆக உயர்ந்திருக்கிறது.அதிலும்,அதிக அளவிலான இடைநிற்றல்கள் 2018 ஆம் ஆண்டில் நிகழ்ந்திருக்கின்றன. இது,பள்ளிக்கல்வி தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு குழப்பத்தில் இருக்கிறது என்பதைகாட்டும் குறியீடாகும்.

இதனை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு, இடைநிற்றலுக்கான காரணங்களை முழுமையாக ஆராய்ந்து சரி செய்ய வேண்டிய கடமை பழனிசாமி அரசுக்கு இருக்கிறது. அதற்கான பணிகளில் அவர்கள் உடனடியாக ஈடுபட வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.

English summary
AMMK General Secretary TTV Dhinakaran has expressed his worried on the 100% increase of School dropouts in 9th and 10th stands in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X