அமமுகவினருக்கு அமைச்சர் பதவி கேட்கும் டிடிவி தினகரன்! எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொள்வாரா?
சென்னை: வரும் தமிழக சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்றும் என் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை (அமமுகவினரை) அமைச்சராக்க வேண்டும் என்பதே என் ஆசை என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் என் சார்பில் போட்டியிடுவோர் அமைச்சராவதே என் ஆசை. எங்களுக்கும் அதிமுகவினருக்கும் இருந்தது குடும்பச் சண்டை.

நாங்கள் ஜெயலலிதா வளர்ப்பில் வந்தவர்கள். கடந்த 2021 ஆம் ஆண்டே நாங்கள் ஒன்று சேர்ந்திருந்தால் திமுக வென்றிருக்காது என தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கம்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். கறுப்பு, வெள்ளை, சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதாவின் படம் உள்ளது. அதிமுகவை மீட்கும் வரை இந்த பெயரில் செயல்படுவோம் என கூறியிருந்தார்.
நாடாளுமன்றத் தேர்தல்
2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் 22 சட்டசபை இடைத்தேர்தல்களிலும் அமமுக பரிசு பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது. அப்போது ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தேமுதிகவுடன் இணைந்து மூன்றாவது அணியாக போட்டியிட்டார்.
165 தொகுதிகள்
அப்போது 165 தொகுதிகளில் போட்டியிட்ட அவரது கட்சி ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. அது போல் 2024 ஆம் ஆண்டு என்டிஏ கூட்டணி போட்டியிட்ட தினகரன் கட்சி 2 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.
திமுக அரசு மீது விமர்சனம்
எனினும் தொடர்ந்து திமுக அரசை விமர்சித்து வந்தார். அது போல் அவ்வப்போது அதிமுகவை மீட்பது குறித்து பழனிசாமி துரோகம் செய்தார் என்பது குறித்தும் கூவத்தூரில் நடந்தது என்ன என்பது குறித்தும் தினகரன் பேசி வந்தார். இதனிடையே அதிமுக- பாஜக கூட்டணி பிரிந்திருந்தது.
அதிமுக கூட்டணியில் பாஜக
ஆனால் கடந்த ஆண்டே அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்துவிட்டது. இதனால் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமிதான் அறிவிக்கப்படுவார் என்பதால் என்டிஏ கூட்டணியில் இருந்து தினகரன் விலகினார்.
தவெகவுடன் கூட்டணி
இந்த நிலையில் அவர் தவெகவுடன் கூட்டணி அமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. கூட்டணி நிலைப்பாட்டையும் காலம் தாழ்த்தி வந்தார். இந்த நிலையில்தான் திடீர் யூடர்ன்னாக தினகரன் மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைவதாக அறிவித்தார்.
பகைமை பாராட்டினார்
ஆனாலும் எடப்பாடி பழனிசாமியுடன் அதே பகைமையை பாராட்டுவார் என எதிர்பார்த்த போது மதுராந்தகம் என்டிஏ கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமியுடன் தினகரன் கைகுலுக்கியதுடன், "எங்களுக்கு இருந்தது குடும்பச் சண்டை. தற்போது எல்லாமே முடிந்துவிட்டது. விரைவில் அதிமுக ஆட்சி மலர நாங்கள் ஒற்றுமையுடன் பணியாற்றுவோம்" என பேசி எடப்பாடிக்கே அதிர்ச்சி கிளப்பினார்.
வளர்ப்பு
அது போல் செய்தியாளர்கள் சந்திப்பிலும் எடப்பாடி பழனிசாமியும் அதே கருத்தை தெரிவித்தார். "நாங்கள் ஜெயலலிதாவின் வளர்ப்பு, தற்போது ஒன்று சேர்ந்துவிட்டோம்" என்றார்.
எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர்
இதனால் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை, தினகரன் ஏற்று செயல்படுவார் என தெரிந்துவிட்டது. இந்த நிலையில் அமமுகவுக்கு எத்தனை சீட் ஒதுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமமுக
அமமுகவுக்கு 6 முதல் 7 சீட்டுகளை எடப்பாடி பழனிசாமி ஒதுக்கலாம் என தெரிகிறது. இந்த நிலையில் கோவில்பட்டியில் தான் போட்டியிடுவதாக தினகரன் கடந்த மாதமே அறிவித்திருந்தார். இந்த நிலையில் வரும் தேர்தலில் நான் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார்.
அமைச்சராக்குவதே எனது ஆசை
மேலும் தன் சார்பில் போட்டியிடும் அமமுகவினர்களை அமைச்சராக்குவதே தனது ஆசை என கூறியுள்ளார். அப்படியென்றால் அவர் கூட்டணி ஆட்சிக்கு அடி போடுகிறார் என தெரிகிறது. தமிழகத்தை பொருத்தமட்டில் கூட்டணி ஆட்சி என்பது சாத்தியமில்லை என பல்வேறு அரசியல் கட்சியினர் கூறியுள்ளனர். அதிலும் கூட்டணி ஆட்சிக்கு இதுவரை ஒப்புக் கொண்டதாக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கவில்லை. எனவே இந்த ஒரு பிரச்சினை அதிமுக- அமமுக இடையே மீண்டும் பிளவை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications