சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சாயும்" தினகரன்.. பாஜகவா?.. "ஈயம் பூசின மாதிரியும், பூசாத மாதிரியும்".. முட்டுகொடுத்து பரபர பேட்டி

டிடிவி தினகரன், ஜெயக்குமாரையும், எடப்பாடியையும் விமர்சித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் நடக்கும் பிரச்சனைகளுக்கு பாஜக காரணமாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்றும், பாஜகவை விமர்சிக்கவில்லை என்கிறார்கள்.. தேவையில்லாமல் நான் யாரையும் விமர்சிக்க மாட்டேன் என்றும், அமமுகவின் டிடிவி தினகரன், கருத்து தெரிவித்துள்ளார்.

Recommended Video

    OPS-ன் செயல்பாடுகளில் நம்பிக்கை இல்லை... Edappadi தலைமை அவசியம் - KP Munusamy *Politics

    அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்... தமிழகம் முழுவதும் இருந்து 320 கழக நிர்வாகிகளை, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் சொன்னதாவது: "வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது இப்போது அதிமுகவில் நடந்து கொண்டிருக்கிறது.

    ஓபிஎஸ்-க்கு “அது” போச்சு.. அவருக்கு பாஜகவும் தேவை, திமுகவும் தேவை - அதிமுக எம்எல்ஏக்கள் ஓபன் டாக் ஓபிஎஸ்-க்கு “அது” போச்சு.. அவருக்கு பாஜகவும் தேவை, திமுகவும் தேவை - அதிமுக எம்எல்ஏக்கள் ஓபன் டாக்

     திணை விதைத்தவர்கள்

    திணை விதைத்தவர்கள்

    நாங்கள் திணை விதைத்தவர்கள்... அவர்கள் வினை விதைத்தவர்கள்... ஆட்சி, அதிகாரம், வசதி வாய்ப்பு தாண்டி தொண்டர்கள் ஆதரவு அவசியம்... பொதுக்குழு என்கிற பெயரில் நடந்த கூத்தை எல்லாம் கண்ணெதிரில் பார்க்கிறீங்க.. அதிமுகவில் இருப்பது அசிங்கங்கள்.. அதிலிருந்த சிங்கங்கள் எல்லாம் எங்கள் பக்கம்தான் இருக்கிறீங்க.. நாங்கள் நரி கூட்டத்தில் சேர விரும்ப மாட்டோம்...

     நயவஞ்சகர்கள்

    நயவஞ்சகர்கள்

    ஜெயக்குமாரை நிதி அமைச்சராக்கியது யார் என்பதை அவரே சொல்லட்டும்... தர்மயுத்தம் தொடங்கியபோது ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்... அதற்கு பிறகு சந்திக்கவில்லை... ஆனால், ஓபிஎஸ் என்னுடைய நண்பர்.. எம்ஜிஆர் கட்சி நயவஞ்சகர்கள் கையில் உள்ளது. சுப்ரீம்கோர்ட், தேர்தல் ஆணையம் வரை முறையீடு செய்தோம்... அதனால், அதிமுக கட்சிக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை... அதிமுகவின் நிலையை பார்த்தால் எனக்கு வருத்தமாகத்தான் இருக்கு.

    ஐபிஎல்

    ஐபிஎல்

    நிர்வாகிகளின் பெரும்பான்மையை வைத்து மட்டுமே முடிவு எடுக்க முடியாது... தலைமை பதவியை தொண்டர்கள் தான் தேர்தேடுக்க வேண்டும். சமுதாயம், மதம் எங்களுக்கு கிடையாது. நாங்கள் அம்மாவின் தொண்டர்கள்... பதவி கொடுத்த பிறகு தான் எடப்பாடியின் குணமே எங்களுக்கு தெரிந்தது. நேர்மையாக செயல்படுவதுதான் ராஜதந்திரம்... இங்கு ஐபிஎல் ஏலம் மாதிரி நடந்து கொண்டிருக்கிறது. பார்க்கவே அறுவெறுப்பா இருக்கு.. ஆனால், உறுப்பினர்கள் தொண்டர்கள் வாகளிக்கட்டும், அப்போ தெரியும் யார் தலைவர் என்று.

     திமுக - பாஜக

    திமுக - பாஜக

    அதிமுகவில் நடக்கும் பிரச்சனைகளுக்கு பாஜக காரணமாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்... இன்னும் அதிமுகவில் என்னுடைய ஸ்லீப்பர் செல் இருக்கிறார்கள்.. நரி கூட்டத்தில் மோத விருப்பமில்லை... நாங்கள் எங்கள் சின்னத்தில் போட்டியிட போகிறோம்... 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எந்த தேசிய கட்சியுடன் இணைந்து செயல்படப் போகிறது என உங்களுக்குத் தெரியும்.. பாஜகவை நான் விமர்சிக்கவில்லை என்கிறார்கள்.. தேவையில்லாமல் யாரையும் விமர்சிக்க மாட்டேன்.. திமுகவை கூட அவசியப்பட்டால் தான் விமர்சித்துள்ளேன்" என்றார்.

    English summary
    ttv dinakaran slams jayakumar and edapadi palanisamy over admk local issues டிடிவி தினகரன், ஜெயக்குமாரையும், எடப்பாடியையும் விமர்சித்துள்ளார்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X